ஏங்க, யாருங்க இவரு.. அத்தனை பேர் சுற்றி நிற்க.. கல்யாண பெண்ணை.. அதுவும் மணமேடையிலேயே.. அதென்ன கையில்
சென்னை: மகிழ்ச்சியாக வாழ்க்கையை துவங்கி உள்ள மணமக்களின் வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் எல்லாருமே ஆச்சரியத்துடன் கண்டு, கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஆணும், பெண்ணும் இணைந்து தங்களின் உறவை அதிகார பூர்வமாக தொடங்க கூடிய நிகழ்வு தான் திருமணம்... வாழ்வில் ஒருமுறை நிகழக்கூடியது என்பதால், எல்லோரின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாக எப்போதும் இருக்கும்.
இதற்காக, தங்கள் திருமணத்தை மறக்க முடியாத அளவுக்கு சிறப்பாக நடத்துபவர்கள் உண்டு.. அதில் பல நெகிழ்வுகள் கலந்திருக்கும்.. பல சமயம் சுவாரஸ்யங்கள் கலந்திருக்கும்.. சில சமயம் விநோதங்களும், கலந்திருக்கும்.

சுவாரஸ்யம்: இப்படித்தான், கேரளாவில் ஒரு அதிகாரி, தன்னுடைய திருமணத்தை சுவாரஸ்யமாக்கியிருந்தார்.. அது இணையத்திலும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அவர் ஒரு கடற்படை அதிகாரி... இவருக்கு கேரளாவில் திருமணம் நடந்துள்ளது... திருமணத்தில் யூனிபார்முடன்தான் காணப்பட்டார். திருமணம் முடியும்வரை யூனிபார்முடனேயே மணப்பெண் பக்கத்தில் நின்றிருந்தார்.. இவர் மட்டுமில்லை, இவருடன் வேலை பார்க்கும் சக கடற்படை நண்பர்களும், யூனிபார்மிலேயே வந்திருந்தனர்..
இவர் அதிகாரி என்பதால், பாதுகாப்பாக வாள் ஒன்றினை பணிசார்பாக தருவார்கள்.. அந்த வாளையும் இவர்கள் கல்யாணத்துக்கு எடுத்து வந்திருந்தனர்.. மணமக்கள் இருவரும் நடந்து வரும்போது, நண்பர்கள் வரிசையாக நின்றுகொண்டார்கள்.. அவர்கள் சொல்வதை, மணமகன் திரும்ப செய்தால், தங்கள் வாளை விலக்கி அவர்களுக்கு வழிவிடுவார்கள்..
அந்தவகையில், மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும்படி சொன்னார்கள்.. அதே போல, மாப்பிள்ளையும் பெண்ணுக்கு முத்தம் தந்தார்.. பெண்ணும், மாப்பிள்ளைக்கு முத்தம் தந்தார்.. இப்படியெல்லாம் நடந்த இந்த திருமணம் அப்போது இணையதில் பலரால் விரும்பப்பட்டது..
ஃபுல் மேக்கப்: இதோ இன்னொரு சம்பவம் இப்போது நடந்துள்ளது. இந்த வீடியோவும் வைரலாகி கொண்டிருக்கிறது.. மணமேடையில் மணமக்கள் அலங்காரத்துடன் காணப்படுகிறார்கள்.. இருவருமே ஃபுல் மேக்கப்பில் உள்ளனர்.. ஆனால், மணமகனோ, பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் மணமகளையே உற்று பார்த்து கொண்டிருந்தார்.. மணமகளின் அழகில் அப்படியே மயங்கிவிட்டார்.. அத்தனை பேர் மேடையிலும், திருமண ஹாலிலும் இருப்பதையே மறந்து, கல்யாண பெண்ணின் அழகில் சொக்கி போய் கிடந்தார்.
கருப்பு துணி: பிறகு, திடீரென, கையிலிருந்த ஒரு கருப்பு துணியை பிடித்து மணமகள் முன்பு சுழற்றினார்.. அதாவது, மணமகளுக்கு மணமகன் திருஷ்டி சுற்றுகிறார்.. இதை பார்த்த மணமகள் ஒரு செகண்ட் திக்குமுக்காடி போனார். மணமகனின் அன்பை பார்த்து வியந்து அவரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டு நிற்கிறார்.. இவ்வளவும், மணமேடையிலேயே நடக்கிறது. அந்த வீடியோவில் இதெல்லாம் பதிவாகி உள்ளது.. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இப்படி எல்லா காலமும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கூறி, மணமக்களுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications