ஓ.. ரேஷன் கடையிலே இதான் நடக்குதா? சாட்டையை சுழட்டிய தமிழ்நாடு அரசு.. பறந்த உத்தரவு.. மக்கள் நிம்மதி
சென்னை: ரேஷன் அட்டைதாரர்கள் நிம்மதி பெறும்வகையில், கூட்டுறவுத்துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.. அதுவும், கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு இந்த முக்கிய அறிவுறுத்தல் பறந்துள்ளது.
ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டை ரத்து என்ற செய்தியும் பகீர் கிளப்பவே கிராமப்புற மக்கள் பெரிதும் அச்சத்திற்கு ஆளாகி விட்டனர்.

இதனால், திட்டமிட்டதைவிட அதிக தொகையை செலவிட நேர்வதாக அட்டைதாரர்கள் குமுறுகிறார்கள். இதுகுறித்து தொடர்ந்து புகார்களை சொல்லி வரும்நிலையில், இந்த வதந்திகளுக்கு கூட்டுறவுத்துறை முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
ரேஷன் அட்டைகள்: இதுகுறித்து, கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் தந்திருந்தார்.. 'பரவிவரும் செய்தி உண்மையல்ல.. ரேஷன் அட்டை பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரத்து செய்யப்படாது. ரேஷன் கார்டில் குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட முகவரியில் இருந்தால் அந்த கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது. போலி ரேஷன் கார்டுகள் மட்டுமே ரத்து செய்யப்படும்.. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் மத்திய உணவு பாதுகாப்பு விதிகளின் படி குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்க முடியும். ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான அனைவரும் ரேஷன் பொருட்கள் வாங்கலாம்.
ரேஷன் கடையின் பெயரே நியாய விலைக்கடை என்பதாகும்.. அதனால், அநியாயமாக அதில் எந்த பணியும் செய்யக்கூடாது. ரேஷன் கடைகளில் சோப்பு, சீப்பு, கண்ணாடி என விரும்பும் பொருள் இருந்தால் வாங்கட்டும். ஆனால், டார்க்கெட் கொடுப்பதாக ஊழியர்கள் சொல்கிறார்கள்.. அதுபோன்று எந்த கட்டாயமும் இல்லை. மக்கள் விரும்பும் பொருட்களை மக்கள் வாங்கலாம். விருப்பமில்லை என்றால் வாங்கத்தேவையில்லை.. ரேஷன் அல்லாத பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்களை எந்த காரணத்தை கொண்டும் கட்டாயப்படுத்தக்கூடாது" என்றார்.
நேரடி ஆய்வு: இந்நிலையில், ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது அதன் எடை குறைவாக இருந்தால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது என்று இன்னொரு அறிவிப்பை கூட்டுறவுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.. அதாவது, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அவ்வப்போது பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் சரியான முறையில் வழங்கப்படுகிறதா? தரமான ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறதா? ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் எல்லாம் சரியான எடையில் தான் இருக்கிறதா? என்றெல்லாம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
அப்படி ஆய்வு மேற்கொள்ளும்போது ரேஷன் பொருட்களின் எடையில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது... இந்நிலையில், கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த கூட்டுறவுத்துறை செயலாளர் அங்குள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தார்..
முக்கிய அட்வைஸ் : பிறகு, ராதாகிருஷ்ணன் சொல்லும்போது, ரேஷன் பொருட்களின் எடை குறைவாக இருக்கிறது என்ற காரணம் காட்டி ஊழியர்களிடமிருந்து அதிகாரிகள் அபராதம் வசூலிக்க கூடாது. அதிகாரிகள் அடிக்கடி அபராதம் விதிப்பதன் காரணமாக, ஊழியர்களும் அதற்கு பயந்துகொண்டு, எடை அதிகமாக தெரிவதற்காக ரேஷன் பொருட்களை நிரப்பிவிடுகின்றனர்.. அதிகாரிகள் ரேஷன் கடைகளை ஆய்வு செய்யும்போது தரமான ஆய்வாக மேற்கொள்ள வேண்டும்" என்று கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications