மதுரை To சென்னைக்கு இன்று மட்டும் சிறப்பு ரயில்.. தாம்பரத்துக்கு ஹேப்பி.. தென் மாவட்டமும் குஷி.. செம
தெற்கு ரயில்வே சார்பாக, தென் மாவட்டங்களிலிருந்தும், வட மாவட்டங்களிலிருந்தும் சென்னைக்கும், சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.. அந்தவகையில், நிரம்பி வழியும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு ஒரு வழி சிறப்பு ரயிலை இயக்க முடிவாகியிருக்கிறது..சென்னை: இன்று ஒரு நாள் மட்டும், பயணிகள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மதுரை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை திரும்பும் பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி திரும்ப மதுரை ரயில்வே கோட்டம் இந்த சிறப்பு ஏற்பாட்டினை செய்துள்ளது.
சனி, ஞாயிறு மற்றும் கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு பொதுமக்கள் பயணத்திருந்தனர்.. தற்போது மீண்டும் சென்னை திரும்ப பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர்.

ரிசர்வேஷன்: ஆனால், இதற்கான ரிசர்வேஷன்களில் ரயில் மற்றும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.. எனவே, பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் ஏற்னவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தெற்கு ரயில்வே சார்பாக, தென் மாவட்டங்களிலிருந்தும், வட மாவட்டங்களிலிருந்தும் சென்னைக்கும், சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.. அந்தவகையில், நிரம்பி வழியும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு ஒரு வழி சிறப்பு ரயில் இயக்க முடிவாகியிருக்கிறது..
திண்டுக்கல்: எண் 06184 கொண்ட இந்த ரயிலானது இன்று ஆகஸ்ட் 27ம் தேதி முதல் இரவு 8.50 மணியளவில் மதுரையில் இருந்து புறப்படுகிறது. திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு வந்து, பிறகு திருச்சியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், வழியாக நாளை காலை 6.30 மணிக்கு தாம்பரத்துக்கு வந்து சேரும்.
இதற்கான கட்டணமும் வெளியாகியிருக்கிறது.. மதுரையில் இருந்து சென்னைக்கு சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்ய ரூ.440 கட்டணம் ஆகும்... மூன்றாம் வகுப்பு ஏசி கட்டணமாக ரூ.1,180-ம், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் டிக்கெட் விலை ரூ.1,635 என நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
சாதாரண படுக்கை: திருச்சியில் இருந்து சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டியில் டிக்கெட் விலை ரூ.414-ம், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் 1,100-ம், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் 1490 -ம் டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவுகளும், ஐஆர்சிடிசி வெப்சைட்களில் தொடங்கியிருக்கிறது... ஏற்கனவே தென்மாவட்டங்களுக்கு சென்றிருப்பவர்களுக்கு, டிக்கெட் முன்பதிவுகள் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், இந்த மதுரை டூ தாம்பரம் ரயிலானது , நிச்சயம் கை கொடுக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications