இட்லி மாவு அரைக்க ரேஷன் அரிசி! இனி ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு ஹேப்பி.. ரூ.9 கோடி பொருள் பறிமுதல்
சென்னை: ரேஷன் அரிசியை பதுக்குவதும், கடத்தும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களது குடும்ப அட்டையும் பறிமுதல் செய்யப்படும்" என்று ஏற்கனவே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், ரேஷன்தாரர்கள் நிம்மதி பெறும்வகையில், முக்கிய செய்திக்குறிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில், ரேஷன் அடடைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப்பொருட்கள் மாதமாதம் வழங்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, குடும்ப அட்டைதாரர்களின் நடைமுறை சிக்கல்களை தீர்த்து, அவர்களின் குறைகளையும் அரசு போக்கி வருகிறது.

எனினும், ரேஷன் அரிசி கடத்தல்களை மட்டும் இன்னமும் முற்றிலுமாக ஒழிக்க முடியாமல் உள்ளது. ரேஷன் அரிசியை, கேரளம், ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநிலங்களுக்கு கடத்துவது தொடர்கதையாகி வருகிறது. தமிழக எல்லைகளில் இதற்கென்றே சில புரோக்கர்கள் இருக்கிறார்களாம்.. இவர்கள்தான், ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று விடுவதாக தெரிகிறது.
இட்லி மாவு பாக்கெட்
இதுபோன்ற புரோக்கர்களால்தான், அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி, பருப்பு முறையாக கிடைக்காமல் போய்விடுகிறது. ஒருசிலர் ரேஷன் அரிசியை இப்படி மூட்டை மூட்டையாக வாங்கி, இட்லி மாவு அரைத்து பாக்கெட்டுகளில் விற்கிறார்கள்.. இதற்காகவே உள்ள அரிசி மில்களுக்கு, ரேஷன் அரிசியை கடத்திக் கொண்டுபோய் தந்துவிடுவார்களாம்.. இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்தலை ஒழிக்கும் முயற்சியில், தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வேட்டையை கையில் எடுத்து வருகிறார்கள்..
அந்தவகையில், கடந்த 2024ம் ஆண்டு மட்டும் சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான கடத்தல் ரேசன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. இதுதொடர்பாக சிவில் சப்ளை குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் செய்தி குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
வழக்குகள் பதிவு
அதில், "தமிழகம் முழுவதும் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் ரேசன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக 11085 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக சுமார் 9 கோடி மதிப்புள்ள 33980 குவிண்டால் ரேசன் அரிசியும், 18898 லிட்டர் மண்ணெண்ணையும், 1984 கியாஸ் சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் ரேசன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக 11571 நபர்கள் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய சுமார் 2012 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 89 பேருக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
புகார் தெரிவிக்க எண்கள்
ரேசன் பொருட்கள் கடத்தல் சம்பவங்களை தடுப்பது தொடர்பாக இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் 41 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் ரேசன் அரசி பொருட்கள் கடத்தல் தொடர்பாக 18005995950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும், 9677736557 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள், அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் சீராக கிடைக்கும் வகையில், தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவது, மக்களிடம் நம்பிக்கையை அதிகரிக்க செய்து வருகிறது
3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
இதனிடையே, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர், கடந்த ஜனவரி 18 அன்று தர்மபுரி அருகே, சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது அவ்வழியாக வந்த ஈச்சர் வாகனத்தில், 14,300 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிய வந்தது.


Click it and Unblock the Notifications
