"அள்ளி எடுங்க".. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரேசன் கடையின் நேரம் மாறுகிறது.. இனி நிம்மதி
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களின் நன்மையை கருத்தில் கொண்டு, ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக பலன்பெற்று வருகிறார்கள்..

அதேபோல, ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு அரசு ஏகப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் கடத்தல்களை ஓரளவு கட்டுப்படுத்தியிருக்கும் தமிழக அரசு, தற்போது, அடுத்த பிரச்சனையை களைய நடவடிக்கை எடுத்து வருகிறது.
வழக்கமாக, ரேஷன் கடைகளில் உள்ள பெரிய பிரச்சனை, நேரத்திற்கு முன்பே ரேஷன் கடைகளை பணியாளர்கள் மூடிவிட்டு சென்றுவிடுகிறார்களாம்..
முறைகேடு: இதனால், மதிய இடைவேளையில் சரியான நேரத்தில் திறப்பது இல்லையாம்.. அதனால்தான், பணியாளர்கள் உரிய நேரத்தில் நியாய விலை கடைகளை திறக்க வேண்டும் என அரசு தரப்பில் உத்தரவிட்டுள்ளது. ஆனாலுட்ம, சில ரேஷன் கடைகள் அரசின் உத்திரவை கடைபிடிக்காமல் இருக்கிறார்களாம்.
மக்களிடம் இதுகுறித்து புகார்கள் வந்த கொண்டே இருப்பதனால் மேலும் பல்வேறு அதிரடி உத்தரவுகளை கூட்டுறவுத்துறை அமல்படுத்த உள்ளது. தற்போது ரேஷன் கடைகள், சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல், 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரையும் செயல்படுகின்றன.. ஆனால், மற்ற மாவட்டங்களில் காலை, 9:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி வரையும்; பிற்பகல், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரையும் செயல்படுகின்றன..
கார்டுதாரர்கள்: இதில், சென்னை மற்றும் புறநகரில் மதியம் ரேஷன் கடைகளை மூடி மறுபடியும் திறப்பதற்கு, 2:30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது.. இந்த நேரத்தில்தான், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை, சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக, கூட்டுறவு மற்றும் உணவு துறை உயரதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.
அதனால்தான், ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட வேண்டும். மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
வார்னிங்: அதேபோல, பொதுமக்களுக்கு உரிய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும். இதனை கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த அதிரடி: இதனிடையே இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது.. அரிசி கடத்தலில் பிடிபடும்பட்சத்தில் நடத்தப்படும் விசாரணையில், அதில் ரேஷன் ஊழியருக்கு தொடர்பு இருப்பது உறுதியானால், அவர்கள் மீது இடமாறுதல், அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைக்கு பதில், நிரந்தர பணிநீக்கம் செய்யலாமா? என்றும் கூட்டுறவுத்துறை சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.
-
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா












Click it and Unblock the Notifications