உகாதி புத்தாண்டு..அன்பும் மகிழ்ச்சியும் நிறைய..மன நிம்மதி பெருக நல் வாழ்த்துக்கள்!
உகாதி பண்டிகை கொண்டாடும் இந்த நல்ல நாளில் உங்கள் நண்பர்கள், அன்பானவர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறுங்கள்.
சென்னை: உகாதி புத்தாண்டு கொண்டாடப்படும் நல்ல நாளில் நாம் தொடங்கும் நல்ல காரியங்கள் வளர்ச்சியடையும். தெலுங்கு வருடப்பிறப்பு மட்டுமில்லாமல் உகாதி பண்டிகை இறைவழிபாட்டிற்கும் ஏற்ற நாள் தான். இந்த நல்ல நாளில் உங்கள் நண்பர்கள், அன்பானவர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறுங்கள்.
ஆங்கில புத்தாண்டு நாளில் உலகம் முழுவதும் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகையில் தமிழ் புத்தாண்டு சூரியனின் நகர்வை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது. மலையாள மாதமும் சூரியனின் இயக்கத்தை வைத்துதான் கொண்டாடப்படுகிறது.

தெலுங்கு, கன்னட மொழி மாதங்கள் சந்திரமான மாதமாக அதாவது அமாவாசைக்கு பிறகு புது மாத பிறப்பு கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு சைத்ர மாதம் பிறப்பு உகாதி புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.
உகாதி பண்டிகை அல்லது யுகாதி பண்டிகை நாள் இந்த யுகம் தொடங்கிய நாளாக கொண்டாடப்படுகிறது. பிரம்மதேவன் தனது படைப்புத் தொழிலை தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் கன்னட தெலுங்கு மொழி பேசும் மக்கள் உகாதி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
இந்த நாளில் வீடுகளை சுத்தம் செய்து கோலங்களும், மாவிலை தோரணங்களும் களைகட்டும்.
தெலுங்கு வருடப்பிறப்பு மட்டுமில்லாமல் உகாதி பண்டிகை இறைவழிபாட்டிற்கும் ஏற்ற நாள் தான். இந்த நாளில் தமிழ் புத்தாண்டைப் போலவே பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உகாதி பண்டிகை கொண்டாடப்படும். கோவில்களில் பஞ்சாங்கம் வாசிப்பார்கள்.
உகாதி பண்டிகை நாளில் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு அனுப்பக்கூடிய யுகாதி வாழ்த்துகளை ஒன் இந்தியா தமிழ் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உகாதி வாழ்த்துக்கள்
யுகாதி புத்தாண்டு
மகிழ்ச்சியும்,மங்களமும் நிறையட்டும்
நிம்மதியும் சந்தோஷமும் பெருகட்டும்
புத்தாண்டில் புதுமைகள் செழிக்க வாழ்த்துக்கள்
----------
இன்பமழை பொழியட்டும்
ஒளிவெள்ளம் வீசட்டும்
அறுசுவை உணவுகளைப்போல
அனைத்தும் நிறைந்திருக்க..
யுகாதி நாளில் வாழ்த்துகிறோம்
------------
செல்வங்கள் பெருக..
மங்களங்கள் நிறைய..
வாழ்வில் மகிழ்ச்சி பெருக..
மன நிம்மதி பெருக...
யுகாதி புத்தாண்டு வாழ்த்துக்கள்!
--------------
வாழ்வில் இன்பங்கள் பெருகட்டும்..
வாழ்க்கையில் ஒளி வெள்ளம் வீசட்டும்..
சொந்தங்கள் சூழ...
வாழும் உங்களுக்கு யுகாதி வாழ்த்துக்கள்!
-----------------
கசப்பும் இனிப்பும் நிறைந்ததுதான் வாழ்க்கை
வாழ்வில் கசப்பு மறைய..
இனிப்பும் மகிழ்வும் கூட..
யுகாதி புத்தாண்டு வாழ்த்துக்கள்!
----------------
மனதில் மகிழ்ச்சியும் பெருக..
புகழும் செல்வமும் நிறைய..
இறைவன் அருளினால்
அன்பும்..கருணையும் சேர
யுகாதி புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
------------------
உங்களின் கனவுகள் நனவாகட்டும்
நினைத்த காரியங்கள் நிறைவேறட்டும்
அன்பானவர்கள் நிறைந்திருக்கட்டும்
யுகாதி புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் தழைத்தோங்க இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications