"யூட்யூபர் முக்தார்.. பனை மரத்தின் பாளையை சீவ அரிவாள் எடுக்குறவங்க நாங்க.." ஹரி நாடார் பேச்சு
சென்னை: "பாத்துகிட்டு சும்மா இருக்கக்கூடிய பரம்பரையில நாங்க பிறக்கல" என்று ஆவேசமாக யூடியூபர் முக்தாரை கண்டித்து பேசியுள்ளார் ஹரி நாடார்.
யூடியூபர் முக்தார், முன்னாள் முதல்வரான காமராஜர் மற்றும் நாடார் சமூகம் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து நாடார் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் ஹரி நாடார் பேசுகையில், காமராஜர் ஐயா பிறப்பதற்கு முன்னரே நாடார் சமுதாயம் தொழில் மற்றும் கல்வியில் முன்னேறிய சமூகம். காமராஜர் வந்துதான் சலுகை கொடுத்ததாக முக்தார் கூறியிருப்பது சரியல்ல. பெருந்தலைவர் காமராஜர் காலத்துக்கு முன்பே நாடார்களுக்கு வங்கிகள் இருந்தன; பத்திரிகை துறையில் சிறந்து விளங்கினர்.

நாடார் சமுதாயம் பள்ளிகளையும் கல்லூரிகளையும் கட்டி அனைத்து ஜாதியினரும், மதத்தினரும் கல்வி பயில வழி வகுத்தது. அப்படிப்பட்ட சமுதாயத்தை முக்தார் கேவலமாக பேசியிருக்கிறார். இதனை சும்மா பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்
பனை மரத்தில் பாளை சீவ அரிவாள் எடுக்கும் வீர பரம்பரை எங்கள் பரம்பரை. அதே நேரத்தில் காமராஜர் கொடுத்த கல்வியை படித்து சட்டத்தை மதித்து முறையாக காவல் துறைக்கு மனு கொடுத்துள்ளோம்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பிரைவேட் கம்ப்ளைன்ட் தாக்கல் செய்திருக்கிறேன். முக்தாரின் முறையற்ற பேச்சுக்காக, காமராஜரின் மீது பாசம் உள்ள நாடார் சமுதாயம் மட்டுமல்லாமல் பல அமைப்புகள் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு முக்தாரை கைது செய்யாமல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை கொடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. முக்தாரை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் எதற்கும் தயங்க மாட்டோம் என்று பேசினார் ஹரி நாடார்.
மேலும், "மூளையற்ற முக்தாரே மன்னிப்பு கேள்" என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இதனிடையே பல முனைகளில் இருந்தும் வந்த எதிர்ப்பு அதிகரிப்பு காரணமாக, யூட்யூப்பர் முக்தார், தனது பேச்சுக்கு இன்று, மன்னிப்பு கேட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications