பண மோசடி வழக்கு.. பெங்களூர் சிறையில் இருக்கும் ஹரி நாடார் மீண்டும் கைது.. தமிழக போலீசார் நடவடிக்கை!
பண மோசடி வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஹரி நாடார் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: பண மோசடி வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஹரி நாடார் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளா தொழிலதிபர் ஒருவர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் 22 மாதங்களுக்கு பின் தமிழக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குலம் அருகே உள்ள மேல இலந்தைக் குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹரி நாடார்.
காதில் ஒரு புளுடூத் ஹெட்செட்டும் நீண்ட தலைமுடியுடன் வலம் வரும் ஹரி நாடார் நடமாடும் நகைக்கடை போலவே இருப்பார். கழுத்தில் விதவிதமான நகைகளை அணிந்தபடி தென்படும் ஹரி நாடார் பனங்காட்டுப்படை என்ற அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.

பனங்காட்டுப் படை கட்சி
கடந்த 2019 ஆம் ஆண்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற போது ஹரி நாடார் அங்கு பனங்காட்டுப் படை கட்சி சார்பாக போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஹரி நாடார் மூன்றாம் இடம் பிடித்தது கவனம் பெறும் வகையில் அமைந்தது. அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருந்தாலும் சுமார் 37 ஆயிரம் வாக்குகள் பெற்று கவனம் பெற்றார்.

ஹரி நாடார் கைது
ஹரி நாடார் மீது பல்வேறு மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலும் ஹரி நாடார் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கட்ராமன் என்பவரிடம் கடன் பெற்று தருவதாகக் கூறி ரூ. 7 கோடி கடன் கமிஷன் பெற்று மோசடி செய்த வழக்கில் கர்நாடக போலீசாரால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஹரி நாடார் கைது செய்யப்பட்டார்.

ரூ. 1.5 கோடி மோசடி செய்ததாக..
தற்போது பெங்களூரு பரப்பன அஹ்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஹரி நாடார் மீது மேலும் ஒரு வழக்கில் சென்னை போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் பஷீர் மற்றும் குஜராத்தை சேர்ந்த இஸ்மாயில் சக்ராத் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் இன்று ஹரி நாடாரை கைது செய்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி ரூ. 1.5 கோடி மோசடி செய்ததாகவும் அந்த பணத்தை மீட்டுத்தருமாறும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து இருந்தனர்.

சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கை
இந்த புகாரின் அடிப்படையில் ஹரி நாடாருக்கு எதிராக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். ஏற்கனவே மோசடி புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஹரி நாடாரை சென்னைக்கு அழைத்து வரும் பணியிலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications