இவ்ளோதாங்க பாகிஸ்தான்.. இந்தியாவின் இந்த ஒரு கம்பெனி வச்சிருக்குற காசு கூட அங்கே கிடையாது- கோயங்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனம், மொத்த பாகிஸ்தானின் பொருளாதார பலத்தைவிட பெரியது என்று ஹர்ஷ் கோயங்கா புள்ளி விவரத்துடன் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்திய அரசு "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் மிகப்பெரிய பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டது. இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

pakistan adani india

இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் துருக்கியில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை பயன்படுத்தி இந்தியாவை தாக்க முயன்றது. இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இந்த ட்ரோன்களை வானில் அழித்தன. பாகிஸ்தானின் இந்த முயற்சியில் துருக்கி நேரடியாக ராணுவ ஆலோசனை மற்றும் ட்ரோன் வழங்கல் மூலம் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவினாலும், இப்போது போர் நிலை இல்லை என இரு நாடுகளும் அறிவித்துள்ளன.

இந்த சூழ்நிலையில், பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா பாகிஸ்தானை, இந்திய நிறுவனமான அதானி குழுமத்துடன் ஒப்பிட்டு, பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை, அதானி குழுமத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டுள்ளார். "ஒரே ஒரு இந்திய நிறுவனம், முழு பாகிஸ்தானை விட பெரியது. ஆனாலும், அவர்கள் எங்களை எதிர்த்து போரிட துணிகிறார்கள்!" என அவர் எழுதியுள்ளார்.

pakistan adani india

அதானி குழுமம் vs பாகிஸ்தான் பொருளாதாரம்

  • மார்க்கெட் மதிப்பு: அதானி குழுமம் - $161 பில்லியன்; பாகிஸ்தான் - $50 பில்லியன் (மூன்று மடங்கு அதிகம்)

  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல்: அதானி - 10.9 GW; பாகிஸ்தான் - 9-10 GW (அதானி குழுமத்தில் சோலார், காற்றாற்றல், ஹைபிரிட் உள்கட்டமைப்பு உள்ளது)

  • பசுமை ஹைட்ரஜன்: அதானி குழுமம் உலகளாவிய தலைமை நோக்குடன் செயல்படுகிறது; பாகிஸ்தானில் இதற்கான பெரிய முயற்சி இல்லை

  • துறைமுகங்கள்: அதானி - 15 துறைமுகங்கள், 627 மில்லியன் மெட்ரிக் டன் திறன்; பாகிஸ்தான் - 3 துறைமுகங்கள், 185 மில்லியன் மெட்ரிக் டன் திறன்

    இந்த ஒப்பீடு சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இந்தியாவின் வளர்ச்சியை எடுத்துரைப்பதாக பாராட்டினாலும், சிலர் இது போன்ற ஒப்பீடுகள் இருநாட்டு உறவுகளில் தேவையற்ற விமர்சனத்தை உருவாக்கும் என விமர்சனம் செய்துள்ளனர். அதானி குழுமம் பாகிஸ்தானை விட பலமானது என்பதை பாசிட்டிவாகவும் எடுக்கலாம், நாம் அதிக சலுகை காட்டினோம் என்றும் எடுக்கலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

    மேலும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு துருக்கி மற்றும் அசர்பைஜான் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால், ஹர்ஷ் கோயங்கா இந்தியர்கள் இந்த நாடுகளுக்குச் செல்லும் சுற்றுலா பயணங்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 2024-ஆம் ஆண்டு மட்டும் இந்தியர்கள் இந்த நாடுகளுக்கு ரூ.4,000 கோடி செலவு செய்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் கடும் பதிலடி நடவடிக்கைகள், எல்லையில் நிலவும் பதற்றம், பாகிஸ்தான்-துருக்கி கூட்டணி, மற்றும் இந்திய தொழில்துறையின் வளர்ச்சி குறித்து சமூக வலைத்தளங்களில் எழும் விவாதங்கள் ஆகியவை தற்போதைய இந்திய-பாகிஸ்தான் உறவுகளை புதிய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன. சரி நீங்க சொல்லுங்க, அதானி, பாகிஸ்தானை விட பலமாக இருப்பது நல்லதுதானே..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+