11.24%.. "மலை" மாதிரி அண்ணாமலைக்கு உதவிய 2 பேர் இவங்கதானா? அப்ப தமிழக பாஜக நிஜமாகவே வளரவேயில்லையா?
சென்னை: தமிழகத்தில் பாஜக வளர்ச்சி பெற்றிருப்பதாக அண்ணாமலை கூறியிருந்த கருத்துக்களுக்கு, சோஷியல் மீடியாவில் எதிர்வினையாற்றப்பட்டு வருகிறது..!!
தமிழகத்தில் பாஜக படுதோல்வியை அடைந்துள்ள நிலையில், இது பாஜகவினருக்கே கடுமையான அதிர்ச்சியை தந்து வருகிறது.. ஆனால், தமிழகத்தில் வாக்கு வங்கி உயர்ந்திருப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து சொல்லி வருகிறார்.
செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசும்போது, "பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. மக்கள் அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதை படிப்பினையாக எடுத்துக் கொண்டு அடுத்து வரும் தேர்தலில், இங்கிருந்து பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.

வாக்கு வங்கி: மற்றொருபக்கம், அண்ணாமலையின் இந்த பேச்சினை சொந்த கட்சியினரே ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாகப் பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், நான் இங்கேதான் இருப்பேன்" என்று கூறியிருந்தார்.
தமிழிசையின் இந்த பேச்சு மிகப்பெரிய அதிர்வலையை கட்சிக்குள் உண்டுபண்ணி வருகிறது.. நேற்றுகூட செய்தியாளர்களிடம் பேசிய தீவிர பாஜக ஆதரவாளரான எஸ்வி சேகர், "அண்ணாமலை, பாஜக கட்சியையே போலீஸ் ஸ்டேஷன்போல நடத்துகிறார்.. பாஜக தோற்றாலும் வாக்கு வங்கி சதவீதம் உயர்ந்ததாக சொல்கிறார்கள். இது முட்டாள் தனமானது.
கூட்டணிகள்: பாஜக பெற்ற ஓட்டுகள் கூட்டணியில் இருந்த தமாகா, புதிய நீதிக்கட்சி, அமமுக, பாமக ஆகிய கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்து தான் சொல்லப்படுகிறது. அதனால், வெட்கமே இல்லாமல் பொய் சொல்ல வேண்டும் என்றால் அது அண்ணாமலையால் மட்டும் தான் முடியும்.. ஒரு ஓட்டில் தோற்றாலும் தோற்றது தான். பாஜக தமிழ்நாட்டில் வாஷ் அவுட் ஆகி விட்டது, இதற்கு அண்ணாமலையே 100 சதவீத காரணம்" என்று கடுமையாக கூறியிருந்தார்.
இந்நிலையில், "பாஜக கொஞ்சமும் வளரவில்லை" என்று ஒரு தரப்பினர், சோஷியல் மீடியாவில், சில புள்ளிவிவர தரவுகளை முன்வைத்து வாதம் செய்கிறார்கள்..
வெற்றி வாய்ப்பு: அதாவது, கடந்த 2019 தேர்தலில் அமமுகவிற்கு 22 லட்சத்து ஆயிரத்து 564 வாக்குகள் கிடைத்தன.. அதாவது 5.38 சதவீதம் அமமுக அப்போது பெற்றிருந்தது. இப்போது தினகரன் 2,78,825 வாக்குகளை தேனியில் பெற்றிருக்கிறார்.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் 1,66,782 வாக்குகளை பெற்றிருக்கிறார்.. திருச்சி தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 1,00,747 வாக்குகளை பெற்றிருக்கிறார்.. பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, ஐஜேகே, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்றவையும் சேர்ந்துதான் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டன. இந்த கூட்டணி கட்சிகளின் வாக்குகள் எல்லாம் சேர்ந்துதான் பாஜவின் வாக்கு சதவீதம் 11.24% ஆக அதிகரிக்க செய்துள்ளது.
அமமுக: அதாவது, அமமுக, ஓபிஎஸின் 6% சதவிகித வாக்குகள் பாஜவுக்கு சென்றுள்ளதே வாக்கு வங்கி உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.. ஒருவேளை, ஓபிஎஸ், தினகரன் இவர்கள் 2 பேருமே இல்லாமல், பாஜக தனித்து போட்டியிட்டிருக்குமா? அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், ராதிகா சரத்குமார் போன்றோரெல்லாம் களமிறங்கியிருப்பார்களா? என்றே தெரியாது.
அப்படி, தனித்து பாஜக போட்டியிட்டிருந்தால், இன்னும் மோசமான வாக்கு வங்கியை பெற்றிருக்கும்.. எனவே, தற்போது கிடைத்திருக்கும் 11.24 சதவீத வாக்கு வங்கி என்பது, பாஜகவுக்கான வளர்ச்சியை காட்டாது.. அது கூட்டணி கட்சிகளின் தயவால் கிடைத்தது" என்று காரசார விவாதங்களை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications