சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பழனிசாமி" போட்ட குண்டு.. பாஜக + திமுகவின் சீக்ரெட் அக்ரிமெண்ட்... கிறுகிறுத்து போன தலைவர்கள்..!

பாஜக திமுக இடையே மறைமுக டீலிங் இருக்கிறதா என கேசி பழனிசாமி கேட்கிறார்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக பக்கம் திமுக நெருங்குகிறது என்று பல தகவல்கள் வட்டமடித்து வரும் நிலையில், பாஜகவுக்கும், திமுகவுக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளதா என்று மூத்த தலைவர் பழனிசாமி எழுப்பிய கேள்வி, அரசியல் களத்தில் புயலாக வீசி வருகிறது,

ஆகஸ்ட் 12 முதல் 19ம் தேதி வரை போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது... இதையடுத்து, போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய முதல்வர், ஒவ்வொரு காவல் நிலைய ஆய்வாளரும் எனது காவல் எல்லைக்குள் போதை பொருள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

7 மாதங்களில் இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 2,726 பேருக்கு கொரோனா தொற்று.. அச்சத்தில் தலைநகர் மக்கள்! 7 மாதங்களில் இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 2,726 பேருக்கு கொரோனா தொற்று.. அச்சத்தில் தலைநகர் மக்கள்!

"சைபர் செல்"

சிறப்பு நீதி மன்றம் அமைக்க உள்ளோம் போதை பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு "சைபர் செல்" உருவாக்கப்பட உள்ளது.. இந்த விவகாரத்தில் ஒரு சர்வாதிகாரி போல செயல்படுவேன் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் தனது கடமையை செய்ய தயங்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கண்டிப்புடன் கூறியிருந்தார்.ம

 குடும்ப தலைவி

குடும்ப தலைவி

இதையடுத்து, முதல்வரின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அந்த அறிக்கையில், போதை ஒழிப்பு தொடர்பாக தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.. அத்துடன், "வருங்கால சந்ததியைப் பாழாக்கி, குடி கெடுக்கும் மதுபானம் ஒரு போதைப் பழக்கம்' என்பதை தமிழகத்தின் முதல்வர், ஏன் உணராததுபோல நடந்துகொள்கிறார்? குடும்பத் தலைவிகளுக்கான, பெண்களுக்கான, நலத்திட்டங்களைத்தான் நிறைவேற்ற மனமில்லை, குறைந்தபட்சம் டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்" என்பது உட்பட சில வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.

 ஒரே அட்டாக்

ஒரே அட்டாக்

இந்நிலையில், போதைப் பொருள் ஒழிப்பு விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை தெரிவித்த பாராட்டுக்களை மட்டும், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான "முரசொலி"யில் செய்தியாக வெளியாகி இருந்தது.. அதாவது அண்ணாமலை வைத்த கோரிக்கை, வேண்டுகோள், திமுகவை சாடியது எதுவுமே பிரசுரிக்காமல், முதல்வரை பாராட்டியது மட்டும் பிரசுரிக்கப்பட்டு இருந்தது...

முரசொலி

முரசொலி

அதாவது,"போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை இத்தனை விரிவாக, இத்தனை தெளிவாக நம் மாநிலத்தின் முதல்வர் அவர்கள் அறிந்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது" என்று செய்தி வெளியாகியிருந்தது. இந்த மேட்டரை ஒரேடியாக பிடித்து கொண்டார் கேசி பழனிசாமி.. முரசொலியில் வந்த செய்தியை பதிவிட்டு, "அண்ணாமலை திடீரென ஸ்டாலினை பாராட்ட காரணம் என்ன? அதிமுகவை முடக்க திமுக பாஜக மறைமுக ஒப்பந்தமா??" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நெருப்பு

நெருப்பு

பாஜகவுடன் திமுக நெருங்கி வருவதாக கடந்த சில தினங்களாகவே சொல்லப்பட்டு வருகிறது.. குறிப்பாக ஒலிம்பியாட் நிகழ்ச்சியை துவக்கி வைக்க பிரதமர் இங்கு வந்து சென்றதில் இருந்தே இந்த பேச்சு உள்ளது.. ஸ்டாலினும், மோடியும் மேடையில் நெருக்கமாக இருந்ததை, வைத்து சில கட்சிகள் அரசியலாக்கியும் வருகின்றன.. அந்த வகையில்தான் கேசி பழனிசாமியும் இந்த கேள்வியை கேட்டிருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 வீசிய வெடி

வீசிய வெடி

அதுமட்டுமல்ல, இப்படித்தான் ரஜினிகாந்த், ஆளுநரை சந்தித்தபோதும், ஒரு குண்டை வீசினார் பழனிசாமி.. அதிமுக சின்னத்தை முடக்கி ரஜினியை முன்னிறுத்தி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.. பழனிசாமி கொளுத்திய அந்த நெருப்பின் புகை இன்னமும் அதிமுகவுக்குள் கொழுந்துவிட்டு புகைந்து கொண்டிருக்கிறது.. இப்போது, "பாஜக - திமுக இடையே மறைமுக அக்ரிமென்ட்டா?" என்று இன்னொரு கேள்வியை கேட்டு, அடுத்த குண்டை திமுக பக்கம் வீசியுள்ளார். இது என்னாக போகுதோ?! பொறுத்திருந்து பார்க்கலாம்..!

English summary
Has DMK and BJP made a secret deal to block AIADMK, asks senior leader kc palanisamy பாஜக திமுக இடையே மறைமுக டீலிங் இருக்கிறதா என கேசி பழனிசாமி கேட்கிறார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X