அவசர அவசரமாக "ஹெட் ஆபீஸ்" ஓடிய எடப்பாடி டீம்.. பாஜகவுடன் உறவு நீளுதா.. அந்த 13 பேர் வேற.. என்னவாம்?
அவசர அவசரமாக எடப்பாடி பழனிசாமி திடீரென சென்னையில் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார்
சென்னை: சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி பிரிவு நிர்வாகிகள் மொத்தமாக 13 பேரும் கூண்டோடு கட்சியில் இருந்து விலகி உள்ள நிலையில், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை மேற்கொண்டார்.. இந்த கூட்டத்தில், மிகமிக முக்கியமான நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றிருந்ததால், அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகள் எகிறின.
அதிமுக - பாஜக இடையே பனிப்போர் மூண்டு வருகிறது.. அண்ணாமலைக்கு நெருக்கமான ஐடி விங்க் நிர்வாகி நிர்மல்குமார், திடீரென்று அதிமுகவில் இணைந்தார்.
அப்போது அண்ணாமலையை 420 என்று மறைமுகமாக குறிப்பிட்டு அறிக்கையையும் விடுத்தார்.. அதைத் தொடர்ந்து மேலும் ஒரு நிர்வாகி அதிமுகவில் இணைந்தார். பிறகு அடுத்தடுத்த நிர்வாகிகள் இணைந்து வருகிறார்கள்.

பெரிய வார்னிங்
பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகியுள்ளது பெரும் பின்னடைவாக உள்ளது. அடுத்தடுத்து ராஜினாமா செய்வதால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பு கடும் அதிர்ச்சியிலும் உள்ளதாக தெரிகிறது.. இதுவரை ஓபிஎஸ் ஆதரவாளர்களை மட்டுமே இழுத்து வந்த எடப்பாடி பழனிசாமி, திடீரென தன் ஆதரவாளர்களை இழுக்கும் பணியை தொடங்கியதால், தானும் அதை செய்ய நேரிடும் என்று அண்ணாமலை நேற்று எச்சரித்திருந்தார்.. இந்த எச்சரிக்கை விடுத்த சமயத்தில், அதே சூட்டோடு ஓபிஎஸ்ஸையும் நேற்றைய தினம் அண்ணாமலை சந்தித்து பேசியிருந்தார்.

ஹாட் களம்
இப்படிப்பட்ட சூழலில்தான், எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.. நாளைய தினம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக சொன்னார்கள்.. ஆனால், இக்கூட்டத்தில் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.. மற்ற நிர்வாகிகள் ஏன் பங்கேற்கவில்லை என்பது உறுதியாக தெரியவில்லை.

ஹேப்பி பழனிசாமி
அதிமுக - பாஜக இடையே நடைபெற்று வரக்கூடிய சர்ச்சையில் அதிமுக இனி எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.. மேலும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு குறித்தான வழக்கில் சுப்ரீம்கோர்ட், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது... இதனையடுத்து பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த முடிவுகளை கட்சி ரீதியாக எடுக்கப்பட தேவை உள்ளது.. இதற்காகவே, அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து நாளை, எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தப்பட உள்ளார்.. எனவே நாளைய தினம் கூட்டத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்தும் இன்று ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

பகடை காய்கள்
இது எல்லாவற்றிற்கும் மேலாக, பாஜகவில் இருந்து பலர் விலகி அதிமுகவில் இணைந்து வரும்சூழலில், அதிமுக, பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள மோதலை எப்படி எதிர்கொள்வது, பாஜகவுடன் கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.. அதுமட்டுமல்ல, பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு எதிரான கருத்துக்கள் தொடர்ந்து வெளிப்படையாக முன்வைக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் அதிமுக நிர்வாகிகள் எவ்வாறு எதிர்வினையாற்றவேண்டும், பதிவு செய்யவேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய கருத்துகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முக்கோண இடி
இதனிடையே, பாஜக உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் லதா, உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு ஒன்றிய தலைவர் வைதேகி ஆகியோர் இன்று அதிமுகவில் இணைந்துள்ளனர்.. இந்த இணைப்பு இனி தொடரும் என்று அதிமுக தலைவர்கள் அறிவித்துள்ளது, பாஜகவுக்கு அடுத்த ஷாக்காக பார்க்கப்பட்டு வருகிறது.. பாஜகவை உடைத்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு செயல்பட்டு வருவது, அக்கட்சிக்கு கலக்கத்தை தந்து வருகிறதாம்.. இதனால்தான், எடப்பாடிக்கு எதிராக செயல்படுவது குறித்து அண்ணாமலை, பன்னீர்செல்வத்தை பெரியகுளத்தில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தியதாக சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications