Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இடிக்குதே".. காளியம்மாள் கணக்கு புரியல.. ஆமா "அண்ணனுக்கு" இது தெரியுமா? கிளம்பி வந்த திமுக.. நிஜமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடியும் நிலையில், பல்வேறு தகவல்கள் இணையத்தை வட்டமடித்து கொண்டிருக்கின்றன. இது உண்மையா? பொய்யா? என்று முழுமையாக தெரியாவிட்டாலும், பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறை தேர்தலில் நிறையவே சோதனை வந்துவிட்டது.. அதிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு சின்னம் பிரச்சனை தலைவலியை தந்துவிட்டது.

செருப்பு சின்னம்: "முதல்ல இந்த பாஜகவின், தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால் நம்முடைய நாட்டின் தேசிய மலரை மாற்ற வேண்டும்.. செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றி பெறுவேன்" என்றெல்லாம் ஆதங்கத்தை கொட்டி கொண்டிருந்தார் நாம் தமிழர் கட்சி சீமான்...

Has Kaliyammal filed 3 bills per bike and Naam Tamilar Party kaliyammal nominations papers

ஆனால், சின்னமே கிடைக்காமல், தங்களது பிரச்சாரத்தை அப்போதே துவங்கிவிட்டார்கள் நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்கள்..

காளியம்மாள்: "எங்களுக்கு சின்னம் முக்கியமில்லை, எங்கள் சின்னமே - எங்கள் அண்ணன் சீமான் தான்" என்று தன்னுடைய பிரச்சாரத்தை துவக்கியிருந்தார் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் காளியம்மாள்...வெறும் 2 மணி நேரம் எங்களுக்கு போதும். எந்த சின்னம் கொடுத்தாலும் அதை மக்களிடம் நாங்கள் கொண்டு செல்வோம்.. எங்களுடைய சின்னம் எங்களுடைய அடையாளமாக எங்களுடைய தலைவர் இருக்கிறார்" என்று உறுதியுடன் காளியம்மாள் பேச ஆரம்பித்தார்.

Has Kaliyammal filed 3 bills per bike and Naam Tamilar Party kaliyammal nominations papers

இதற்கு பிறகு, தமிழக அரசின் 1000 ரூபாய் உரிமைத்தொகை குறித்து காளியம்மாள் பிரச்சாரத்தில் விமர்சித்திருந்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

தூத்துக்குடி: அதேபோல, தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி 1516 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு சொத்தை வெறும் 87 கோடி ரூபாய்க்கு வாங்கி சர்க்கரை ஆலையை சாராய ஆலையாக மாற்றியுள்ளார்" என்று காளியம்மாள் பேசியிருந்தது அதற்கு மேல் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, திமுக மகளிரணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Has Kaliyammal filed 3 bills per bike and Naam Tamilar Party kaliyammal nominations papers

இப்படி பல்வேறு சர்ச்சைகளில் இந்த முறை காளியம்மாள் சிக்கிவரும்நிலையில், இன்னொரு பகீர் கிளம்பியிருக்கிறது.. கடந்த 3 தேர்தலிலும் தொடர்ச்சியாக போட்டியிட்டு வரும் காளியம்மாள், 3 தேர்தல்களிலும் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

காளியம்மாள்: இதில், "வாகனம்" என்கிற பகுதியில், ஒரே வண்டிக்கு 3 வெவ்வேறு விலைப்பட்டியலை தாக்கல் செய்திருக்கிறாராம் காளியம்மாள்... காளியம்மாளின் கணவரிடம் இருப்பது Bajaj Pulzer PY 02 J4591 என்கிற பைக்..

Has Kaliyammal filed 3 bills per bike and Naam Tamilar Party kaliyammal nominations papers

அந்த பைக்கின் இந்த முறை தாக்கல் செய்த வேட்புமனுவில் 60300 ரூபாய் என பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. கடந்த 2019ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் இதே பைக்கின் விலை 30000 என பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அதே பைக்கின் விலை 20000 ரூபாய்.

வருமான வரி : அதுமட்டுமல்ல, 2021ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 2015ல் இருந்து வருமான வரி தாக்கல் செய்த தொகையை பதிவிட்டுவந்த நிலையில், 2019ல் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறாராம். இது தொடர்பான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களும் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+