பழைய பன்னீரு.. "ஏங்க, எஸ்.வி சேகர் ஞாபகமிருக்கா".. அப்பாவு "காதை" கடிச்சதுமே படக்னு முகம்மாறிய ஓபிஎஸ்
சென்னை: ஓபிஎஸ்ஸின் அரசியல் வேகமெடுத்து வரும் நிலையில், அவரது மாநாடு குறித்த முக்கிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.. அத்துடன், ஓபிஎஸ்ஸூக்கு அப்பாவு தந்த அட்வைஸ் பற்றின தகவலும் கசிந்து கொண்டிருக்கிறது.. என்னவாம்?
நடத்த போகும் திருச்சி மாநாட்டை அளவுக்கு அதிகமாகவே நம்பியிருக்கிறார் ஓபிஎஸ்.. கடந்த வாரம் பாஜக அமைச்சர் ஒருவர் ஓபிஎஸ் தரப்பில் பேசியபோது, "நிறைய பேரணிகளை நடத்துங்கள், மாநாடுகளை நடத்துங்கள், கூட்டங்களை கூட்டுங்கள், இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்து கொண்டே இருங்கள், பாஜக உங்களை ஒருபோதும் கைவிடாது" என்றாராம்.
இதையடுத்து, திருச்சி மாநாட்டை தவிர, அடுத்தடுத்த மாநாடுகளையும், பேரணிகளையும் நடத்த போகிறாராம் ஓபிஎஸ்.. தனக்கான செல்வாக்கு என்ன என்பதை மேலிடத்துக்கு காட்டினால்தான், கூட்டணி, சீட் என்ற விவகாரத்துக்குள்ளேயே நுழைய முடியும் என்பதையும் ஓபிஎஸ் நன்றாகவே உணர்ந்துள்ளதாக தெரிகிறது.

அன்வர்ராஜா: அந்தவகையில், இப்போதைக்கு திருச்சி மாநாட்டை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதிலேயே முழு கவனத்தை திருப்பி வருவதாக தெரிகிறது.. பிரிந்துபோனவர்களுக்கும் ஓபிஎஸ் அழைக்க நினைக்கிறாராம்.. குறிப்பாக, மூத்த தலைவர்கள் கேசி பழனிசாமி, அன்வர்ராஜா, சசிகலா, உள்ளிட்டோரை அழைக்கும் விதமாகவும் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டு வருகிறாராம்.. ஆனால், சசிகலா இதில் நேரடியாக கலந்து கொள்வது சந்தேகம்தானாம்.. அதேபோல அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் மாநாட்டில் பங்கேற்பது டவுட் என்கிறார்கள்.. எனினும், இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்பை, வைத்திலிங்கம் முழுவீச்சில் செய்து கொண்டிருக்கிறாராம்.
அதுவும் மாநாட்டு செலவு விவகாரத்தைகூட, தானே இழுத்துப்போட்டுக் கொண்டு, தன்னுடைய விசுவாசத்தை ஓபிஎஸ்ஸிடம் காட்டி வருகிறாராம் வைத்திலிங்கம்.. இந்த மாநாட்டை மட்டும் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டால், தன்னுடைய பலத்தை மேலிட பாஜகவுக்கு தெரியப்படுத்திவிடலாம், இதைவைத்தே அடுத்தக்கட்டமாக பேச்சுவார்த்தையை மேலிடத்தில் நடத்தலாம் என்பதே ஓபிஎஸ் அணியின் திட்டமாக உள்ளதாம்.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் என்றாலே தென்மண்டலம், முக்குலத்தோர் என்ற முத்திரை படிந்துவிட்ட நிலையில், இதை நொறுக்கும் விதமாகவே இந்த மாநாட்டை நடத்த முயன்றுள்ளாராம் ஓபிஎஸ்..

வைத்திலிங்கம் அதிரடி: இந்த மாநாட்டை பொறுத்தவரை பல்வேறு சமூக தலைவர்கள் பங்கேற்கக்கூடிய மாநாடாக இருக்க வேண்டுமே தவிர, எந்தவிதமான சாயமும் பூசிவிடக்கூடாது என்று நிர்வாகிகளிடம் சொல்லி உள்ளாராம். கொங்குவில் மட்டுமே பலம்பொருந்திய தலைவராக எடப்பாடி கருதப்பட்டு வரும்நிலையில், ஓபிஎஸ்ஸின் இந்த வியூகம், லேசாக கலக்கத்தை எடப்பாடி தரப்புக்கு தந்து வருகிறதாம்.
இப்படிப்பட்ட சூழலில், ஓபிஎஸ்ஸூக்கு ஒரு முக்கிய அட்வைஸ் ஒன்றை சபாநாயகர் அப்பாவு தந்துள்ளாராம்.. 2 நாட்களுக்கு முன்பு, அப்பாவுவும், ஓபிஎஸ்ஸூம் தனியாக பேசியிருக்கிறார்கள்.. அப்போது ஓபிஎஸ்ஸிடம், "நீங்கள் முன்னாள் முதல்வராக இருந்திருக்கிறீர்கள்.. முக்கிய பொறுப்புகளிலும் வகித்துள்ளீர்கள்.. அதனால்தான் நான் பேச வாய்ப்பு தருகிறேன்.. ஆனால், நீங்கள் "அதிமுக சார்பில்" என்று அறிவித்துவிட்டு பேசாதீங்க.. ஏனென்றால், "அதிமுக சார்பில்" மற்ற 2 பேருக்கும் பேச வாய்ப்பு தந்திருக்கிறேன்.. அப்படி இருக்கும்போது, அதிமுக சார்பாக நீங்களும் பேசினால், அது எனக்கு நெருக்கடியாக மாறிவிடும் என்றாராம்.

எஸ்வி சேகர்: இந்தநிலையில், சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஆதரித்து ஓபிஎஸ் பேசியபோது, மறுபடியும் அதிமுக சார்பில் இந்த மசோதாவை வரவேற்பதாக சொல்லி உட்கார்ந்தார்.. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏ-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. இதனையடுத்து, "முன்னாள் முதலமைச்சர்" என்ற அடிப்படையில் உங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கிறேன்... அதனால், "அதிமுக சார்பில்" என்பதை மட்டும் தவிர்த்து கொள்ளுங்கள் என்று ஓபிஎஸ்ஸுக்கு ஆலோசனை தந்தாராம் சபாநாயகர்... இதைக் கேட்டு அதிர்ந்த ஓபிஎஸ், "நானும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டவன்தானே" என்றார்.
அதற்கு சபாநாயகர், 'எஸ்வி சேகர் சட்டசபை விவகாரம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றிப் பெற்றவர்தான்.. ஆனால், அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலினை பாராட்டியதற்காக நீங்கள் அவரை ஒதுக்கி வைக்கவில்லையா? அவர் "அதிமுக சார்பில்" என்று சொல்லக்கூடாது என நீங்கள் உட்பட எல்லாருமே அன்று சட்டப் பேரவையில் எதிர்ப்பு தெரிவித்தது நினைவில்லையா?" என்றாராம்.. அப்பாவு இதை சொன்னதும், ஓபிஎஸ் வேறு வழியில்லாமல் கப்சிப் ஆகிவிட்டாராம்.. இதன் பிறகு, பேரவையில், அதிமுக சார்பில் என்று தன்னை சொல்லிக்கொள்ளாமல் தவிர்க்க துவங்கி உள்ளாராம்..!!!












Click it and Unblock the Notifications