புஸ்ஸாயிடுச்சே.. பாஜக மேல இவ்ளோ வெறுப்பா? ஆசை ஆசையாக கூட்டணி வெச்சாங்களே.. இதென்ன புதுஸா? திமுக குஷி
சென்னை: தமிழகத்தில் கூட்டணி முடிவாகி, அந்தந்த அரசியல் கட்சிகள் பிரச்சாரத்திலும் இறங்கிவிட்டன.. ஆனாலும், ஒருசில பொருமல்கள் பாஜக கூட்டணியிலிருந்து வெடிக்க துவங்கி உளளன. என்ன காரணம்?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் காரணமாகவே, இந்த முறை தனித்து போட்டியிட வேண்டிய சூழலுக்கு பாஜக ஆளாகி உள்ளது..

பாமகவை யார் கூட்டணிக்குள் கொண்டுவரப்போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு கடைசி நிமிடம் வரை நீடித்த நிலையில், பாஜக இதில் முந்திக்கொண்டது.
வடமாவட்டம்: காரணம், வட தமிழகத்தின் வாக்கு வங்கிக்காக பாமவையே பெரிதும் நம்பியிருப்பதாக தெரிகிறது. அந்தவகையில், பாமக, ஓபிஎஸ், தினகரன், பாரிவேந்தர், ஜான் பாண்டியன், ஏசி சண்முகம், தேவநாதன், ஜிகே வாசன் என பாஜக கூட்டணி இறுதியாகி உள்ளது.
அதாவது, வன்னியர் வாக்குகளுக்கு பாமக, தேவேந்திர குல வேளாளர் வாக்குகளுக்கு தமமுக, முதலியார் வாக்குகளுக்கு புதிய நீதிக்கட்சி, யாதவர் வாக்குகளுக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், முக்குலதோர் வாக்குகளுக்கு டிடிவி தினகரன், ஓபிஎஸ், உடையார் வாக்குகளுக்கு இந்திய ஜனநாயக கட்சி என நாலாபக்கமும் கணக்கு போட்டே, கூட்டணி வலையை விரித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜாதிக்கட்சி: சுருக்கமாக சொல்லப்போனால், ஜி.கே.வாசன் தவிர மற்ற அத்தனை கட்சிகளும் ஜாதிக்கட்சிகளாகவே கூட்டணியில் இடம்பெற்றிருப்பது பலரையும் கவனிக்க செய்து வருகிறது.. அதைவிட முக்கியமாக, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், அந்தந்த கட்சியின், சில முக்கிய நிர்வாகிகளிடம் அதிருப்திகளும் வெடிக்க துவங்கியிருக்கின்றன.
தமாகாவின் முன்னாள் எம்எல்ஏவும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவருமான கதிர்வேல் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவே தெரிகிறது.. இதனால் அவர் கட்சியை விட்டே விலகுவதாக அறிவித்துவிட்டார்..பாஜகவிடம் பேரம் பேசி 3 இடங்களை வாங்கிய ஜிகே வாசன் அவற்றை அதிக விலைக்கு விற்று வருவதாக, போகிற போக்கில் குற்றச்சாட்டையும் வீசிவிட்டு சென்றிருக்கிறார்.
தேனி அமமுக: இதுபோலவே அமமுகவிலும் அதிருப்தி வெடித்துள்ளது.. தேனி மாவட்டம் கம்பம் நகர அமமுக துணைச்செயலாளரான சாதிக்ராஜா ஒருபடிமேலே போய்விட்டார்.. இவர் கம்பம் நகர் முழுவதும் பரபரப்பு போஸ்டர் ஒன்றை ஒட்டியிருக்கிறார்..
அந்த போஸ்டரில், "வரப்போகும் தேர்தலில் சிறுபான்மையினரை அழிக்கும் நோக்கத்துடனும் தமிழகத்தை வஞ்சிக்கும் பாசிச மதவாத கட்சியான பாஜகவுடன் அமமுக கூட்டணி வைத்ததால் கட்சியில் இருந்து விலகிக்கொள்கிறேன். சிறுபான்மை இனத்தை சேர்ந்த முக்கிய பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் சற்று சிந்தித்து செயல்படுங்கள்" என்றும் அந்த போஸ்டரிலேயே அறிவுறுத்திவிட்டு போயிருக்கிறார் சாதிக் பாட்சா.
பாமக நிர்வாகிகள்: இதேபோல அதிருப்தி பாமகவிலும் வெடித்துள்ளது. வட மாவட்டங்களில் பாஜகவில் பொறுப்பில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் பாமகவிலிருந்து சென்றவர்கள்தான் என்றாலும், எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்படுவது சந்தேகம்தான் என்கிறார்கள். எங்களது கடலூர் மாவட்ட பெரும்பாலான கிராமங்களில் பாஜகவுக்கு பூத் கமிட்டிகளே கிடையாது.. கூட்டணி அமைத்தாலும் வேலை செய்ய தொண்டர்கள் வேண்டுமே? என்கிறார்கள்.
அரியலூர் பாமக நிர்வாகிகள் சொல்லும்போது, "கடந்த முறை வலுவான கூட்டணி வைத்தும், ஜெயங்கொண்டம், விருத்தாசலம் தொகுதிகளில் தோற்றதற்கு காரணமே திமுகவின் வலிமையான அடித்தளம்தான். ஆனால் இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளபோது, எப்படி வெற்றி பெற முடியும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இடஒதுக்கீடு: அதுமட்டுமல்ல, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக கொண்டவந்தபோது, அதை பாஜக கூட்டணியிலிருக்கும் சில கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன. அப்படியிருக்கும்போது, இந்த முறை மக்கள் ஆதரவை எப்படி பெற முடியும்? சாதிவாரி கணக்கெடுப்பை பாமக வலியுறுத்தியபோது, அதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. ஆனால், பாஜக அமைதி காத்து வருகிறதே? இதற்கு என்ன காரணம்?
எனவே, பாமக - பாஜக கூட்டணியால் மேல்மட்ட தலைவர்கள் திருப்தியடைந்துகொள்ளலாமே தவிர, தொண்டர்களை திருப்திப்படுத்துவது கஷ்டம்.. தேர்தல் வேலைகளில் முழுமனதுடன் எப்படி வேலை செய்வார்கள் என்றே தெரியவில்லை" என நொந்து சொல்கிறார்கள் பாமக தரப்பில்.
மதவாதம்: ஆக, மதவாதமும், வெறுப்பு அரசியலும் தமிழகத்தில் எடுபடாத சூழலில், பாஜக உருவாக்கியிருக்கும் இந்த கூட்டணி, திராவிடர் கட்சி ஓட்டுக்களை பிரிக்கும் சக்தியாக திகழுமா? என்று தெரியவில்லை.. ஆனால், சொந்த கட்சியிலிருந்தே அதிருப்திகள் வெடித்துள்ளது, பாஜக - பாமக கூட்டணியின் வெற்றியை அசைத்து பார்ப்பதுபோலவே உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
ஒரே சமூகம்.. ஓட்டுகளை பிரிக்கும் சுந்தர் சி.. பிடிஆருக்கு செம டஃப்.. திடீர் வேட்பாளர் ஆனது எப்படி? -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ்












Click it and Unblock the Notifications