அரண்டு நின்ற எடப்பாடி.. அந்த ரூமில் நுழைந்தால் "அவராமே".. நீங்கியது நெருடல்.. நிம்மதியில் தாமரை + இலை
சென்னை: இத்தனை நாளும் மனக்கசப்புடனும், அதிருப்தியுடனும், அண்ணாமலை மீது கருத்துக்களை முன்வைத்த எடப்பாடி பழனிசாமி, இப்போது சமரச போக்கை கையாண்டுள்ளார்.. அப்படி என்ன நடந்தது அமித்ஷா வீட்டில்?
நேற்றைய தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியபோது, தேசிய தலைவர் நட்டா இருந்திருக்கிறார்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அந்த சந்திப்பின்போது இருந்திருக்கிறார்..

தேர்தல் கூட்டணி, சீட் விவகாரங்கள், தொகுதி நிலவரங்கள் உட்பட பல்வேறு விஷயங்களை இவர்கள் அனைவரும் பேசியிருக்கிறார்கள்.. இரு தரப்பிலுமே நிபந்தனைகளும், கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன..
பேட்டி : இதில், இரு தரப்புமே ஓரளவு ஓகே ஆகியிருப்பது போல தெரிகிறது.. இந்த சந்திப்புக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி தந்திருந்தார். அப்போது, "அண்ணாமலைக்கும், உங்களுக்கும் இடையேயான தகராறு குறித்து நேற்றை சந்திப்பில் பஞ்சாயத்து எதுவும் நடைபெற்றதா?" என்று கேட்டார்கள்..
அதற்கு எடப்பாடி பழனிசாமி, "நீங்க தவறான கருத்தை சொல்றீங்க.. எங்களுக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எந்தவிதமான தகராறும் இல்லையே.. தகராறு இருந்தால் எப்படி ஈரோட்டில் வந்து அவர் பிரச்சாரம் செய்திருப்பார்? இதுபோன்ற உள்நோக்கத்துடன் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பக் கூடாது... எங்கள் கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இனியும் தொடரும்" என்று பதிலை சொல்லி அசரடித்தார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக ஊழல் பட்டியல்: சமீபகாலமாகவே, அதிமுக - பாஜகவின் 2ம்கட்ட தலைவர்கள் மாறி மாறி விமர்சித்து கொண்டிருந்த நிலையில், ஒருவரையொருவர் தாக்கி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடியின் இந்த பதில் அதிர்ச்சியை தந்தது.. அதிமுகவின் ஊழல் பட்டியலும் வெளியாகும் என்று அண்ணாமலை சொல்லியுள்ளாரே என்று எடப்பாடியிடம் கடந்தவாரம்கூட செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்..
அதற்கு அவர், "ஏங்க, அவரை பற்றி பேசாதீங்க.. அவரை பற்றி ஏன் பேசுறீங்க.. பேசி பேசியே பெரிய ஆள் ஆயிடலாம்னு அவர் நினைக்கிறார். முதிர்ச்சியான அரசியல் தலைவரை பற்றி கேளுங்க. நான் பதில் சொல்றேன். அவரை பற்றி எல்லாம் கேட்காதீங்க" என்று காட்டமாக கூறியிருந்தார்.
இந்த செய்தியாளர் பேட்டியையும், இப்போது, அண்ணாமலையுடன் ஒரு பிரச்சனையும் இல்லை என்று எடப்பாடி தந்திருந்த பேட்டியையும் ஒப்பிட்டு இணையத்தில் வீடியோக்களை டிரெண்டாக்கிவிட்டனர்.. இதனிடையே, உண்மையிலேயே அமித்ஷா வீட்டில் என்னதான் நடந்தது? என்பது குறித்த உசில செய்திகள் கசிந்துள்ளன..
பேச்சுவார்த்தை : தனியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றுதான் அனுமதி கேட்டு இத்தனை நாளும் காத்திருந்தாராம் எடப்பாடி பழனிசாமி.. அதன்படியே, டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச அனுமதி தரப்பட்டுளள்து. அமித்ஷாவின் வீட்டிலேயே அவரை சந்தித்து பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. எடப்பாடி தமிழில் பேசியதை, இந்தியில் ஒருவர் மொழி பெயர்த்து அமித்ஷாவிடம் சொன்னாராம்.. அவர் சொன்னதை தமிழில் எடப்பாடியிடம் அவர் சொன்னாராம்.
இதில், அண்ணாமலை குறித்து நிறைய புகார்களை எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் சொன்னாராம்.. குறிப்பாக,
"வார் ரூம் என்ற பெயரில் அங்கிருந்து எனக்கு எதிராக நிறைய ட்வீட்களை வெளியிட்டு வருகின்றனர்.. 2 நாட்களுக்கு முன்பு கூட திகார் ஜெயிலில் நல்ல ரூம் வாங்கித் தரவா? என்று அமர்பிரசாத் ரெட்டி டிவிட்டர் போட்டிருந்தார்" என்று எடப்பாடி அமித்ஷாவிடம் சொல்லியிருக்கிறார்.. மேலும், அதற்கான ஆதாரங்களையும் எடுத்து தந்திருக்கிறார்.
அனைத்தையும் பொறுமையாக கேட்ட அமித்ஷா, நான் பார்த்து கொள்கிறேன் என்று சொன்னாராம்.. இதற்கு பிறகு ஒருங்கிணைந்த அதிமுக குறித்தெல்லாம் அமித்ஷா எடப்பாடியிடம் பேசியதாக தெரிகிறது.. பிறகு, அனைவரும் சேர்ந்து க்ரூப் போட்டோ எடுக்க அடுத்த ரூமுக்கு போனார்கள்.. அந்த ரூமில் தேசிய தலைவர் நட்டாவும், அண்ணாமலையும் இருந்ததை பார்த்து எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியடைந்துவிட்டாராம். காரணம், அவ்வளவு நேரம் அண்ணாமலை பற்றி புகார்களை அடுக்கி கொண்டிருந்தநிலையில், அமித்ஷா வீட்டுக்கே அண்ணாமலை வந்திருப்பதை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்..
ஷாக் ஆன எடப்பாடி: பிறகு வேறு வழியில்லாமல் அனைவரும் ஒன்றாக போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர்.. இதற்கு பிறகு, "தமிழகத்தில் அதிமுக - பாஜக இரு தரப்பிலுமே சுமூகமான மனப்போக்குடன் நடந்து கொள்வோம்" என்று எடப்பாடி + அண்ணாமலை சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாம். ஆக மொத்தம் நேற்றைய தினம் நடந்த இந்த சந்திப்பும், பேச்சுவார்த்தையும், அதிமுக - பாஜக தொண்டர்களுக்கு நிம்மதியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறதாம்.
முன்னதாக, சீட் விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் பாஜக சில டிமாண்டுகளை அதிமுகவிடம் வைத்ததாம்.. அதாவது, கடந்த தேர்தலில் ஒதுக்கியதை விட இந்த முறை கூடுதல் இடங்கள் நிச்சயம் வேண்டும் என்பதுதான் முக்கிய நிபந்தனையாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. முக்கியமாக, கொங்கு பகுதியிலும், அதிலும் நீலகிரி தொகுதியையும் சேர்த்து ஒதுக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் கேட்டார்களாம்.. இதுபோக, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்படுகிறதோ அதற்கு இணையாக அல்லது அதைவிட அதிகமாக வேண்டும் என்றும் பாஜக கோரிக்கையை வைத்ததாம்..
பெரிய பிளான்கள்: காரணம், வரும் 2024 எம்பி தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெறும், அப்போதும் 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார்.. அதோடு 400 இடங்களில் வெற்றி என்ற இலக்குடன் செயல்படுவதாலும், இந்த முறை அதிக இடம் வேண்டும் என்று அதிமுகவிடம் டிமாண்டு செய்ததாம் பாஜக..அதுமட்டுமல்ல, எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து விட வேண்டும் என்று பாஜக தரப்பில் கேட்கப்பட்டதாம்.. ஏனென்றால், பாஜக போட்டியிடும் தொகுதிகளில் இப்போதிருந்தே மத்திய அமைச்சர்களை களம் இறக்கும் திட்டத்தை ஏற்கெனவே பாஜக வகுத்து வைத்திருப்பதுதானாம்..
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications