"அது" மட்டும் நடக்கக்கூடாதே.. "இடி" தகவலால் ஆடிப்போன தினகரன், ஓபிஎஸ்.. கிளம்பறாரு எடப்பாடி பழனிசாமி
சென்னை: தென்மண்டலங்களில், தன்னுடைய வாக்கு வங்கியை அதிகப்படுத்துவதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு வியூகங்களை கையில் எடுத்திருக்கிறார். அவரது ஒவ்வொரு அரசியல் காய்நகர்த்தலையும், ஓபிஎஸ், தினகரன், சசிகலா மட்டுமல்லாமல், பாஜக தரப்பும் உற்றுகவனித்தபடியே வருகின்றன.
கடந்த முறை, ஒட்டுமொத்த தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பில், எடப்பாடி பழனிசாமி இருந்தபோதே, சாதிய ரீதியான கட்சி என்ற "அடையாளத்தை" அதிமுக பெற்றுள்ளதாக சலசலக்கப்பட்டது.

அதற்கேற்றபடி, ஓபிஎஸ் ஒரு பக்கம், எடப்பாடி மறுபக்கம் என தெற்கு + கொங்கு என கடந்த ஆட்சி காலத்தில் அரசியல் செய்து வந்தனர்.. 4 ஆண்டு காலம் ஓரளவு இணக்கமாக இவர்கள் சென்றாலும், சட்டசபை தேர்தலுக்கு முந்தைய காலகட்டங்களில், 2 தலைவர்களிடம் அதிருப்திகள் வெடித்தன.
பசும்பொன்: அந்த நேரத்தில்தான், அதாவது 2022-ம்ஆண்டில் தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.. சசிகலா உட்பட ஓபிஎஸ் டீம் ஆதரவாளர்கள் அத்தனை பேரும் பசும்பொன்னுக்கு நேரடியாக சென்று தேவர் சிலைக்கு மாலை போட்டனர்.. ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி, பசும்பொன்னுக்கு போகாமல் எடப்பாடி பழனிசாமி தவிர்த்துவிட்டார்.
ஓபிஎஸ் + சசிகலா இருவரையுமே நேரில் சந்திக்க நேரிடும் என்பதாலேயே இந்த பயணம் தவிர்க்கப்பட்டதாக அப்போதே சலசலக்கப்பட்டது. எடப்பாடி தேவர் ஜெயந்திக்கு தொடர்ந்து வருகை தராமல் போனது, அச்சமூகத்தினரிடையே, மிகுந்த அதிருப்தியையும் பெற்று தந்தது..
அதிருப்தி வாக்குகள்: ஏற்கனவே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மீது தென்மண்டலத்தில் அதிருப்தி உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த அதிருப்தியும் சேர்ந்துகொண்டதால், ஓபிஎஸ், தினகரன் டீம் அதனை அறுவடை செய்ய முயன்றதுடன், எடப்பாடி பழனிசாமியை முக்குலத்தோருக்கு எதிரானவர் என்கிற முத்திரையும், பரவலாக உலா வர துவங்கியது.
அதுமட்டுமல்ல, மாயத்தேவருக்கு, அஞ்சலி செலுத்தவும் எடப்பாடி பழனிசாமி அப்போது செல்லாததையும் முக்குலத்தோர் கவனிக்காமல் இல்லை.
புது பொறுப்புகள்: இப்படிப்பட்ட சூழலில்தான், ஒருசில அதிரடிகளை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி.. அச்சமூக மக்களின் மனதை குளிர வைப்பதற்காகவே பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி ஆர்பி உதயகுமாருக்கும் ஒதுக்கியிருந்தார்.
ஒவ்வொருமுறையும் மதுரையில் எடப்பாடி பழனிசாமி நடத்தும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு, பொறுப்பாளராக உதயகுமாரை நியமிக்கப்பட்ட போதிலும்கூட, எடப்பாடி மீதான செல்வாக்கு, எதிர்பார்த்த அளவுக்கு தென்மண்டங்களில் கூடவில்லை என்றே கணிக்கப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பு: ஆனால், எடப்பாடி பழனிசாமியின் விடாமுயற்சி, கடின உழைப்பு, கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டுபோகும் விதம், சாதகமான அடுத்தடுத்த நீதிமன்ற தீர்ப்புகள், திமுக எதிர்ப்பு, பாஜக வெறுப்பு என அத்தனை விஷயங்களையும் கையில் எடுத்துள்ளதால், எடப்பாடிக்கான மவுசு எகிறி வருவதாக தெரிகிறது. சமீபத்திய நடத்திய மதுரை மாநாட்டின் வெற்றியானது, கூடுதல் பலத்தை எடப்பாடிக்கு தந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.
அதனால்தான், முக்குலத்தோரின் வாக்குகளை மேலும் பெறுவதற்காக சில வியூகங்களை எடப்பாடி முன்னெடுத்து வருவதாக தெரிகிறது.. அந்தவகையில், சில மாறுதல்களையும் தென்மண்டல அதிமுகவில் ஏற்படுத்தியும் வருகிறார்..
நிர்வாகிகள் நியமனம்: நேற்றுகூட, தேனி மாவட்டத்தில், எம்ஜிஆர் இளைஞர் அணி, வக்கீல் பிரிவு, சிறுபான்மை பிரிவு என பல்வேறு பிரிவுகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.. இதற்கான அறிவிப்பை, எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். இதோ, வருகிற 30-ம் தேதி பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார்.
கமுதி அருகே உள்ள கிளைச் செயலாளர் ஆறுமுகம் என்பவர் விடுத்த அழைப்பை ஏற்று முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த 2 வருடங்களாகவேஇ, பசும்பொன் செல்லாத எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளராகிய பிறகு முதல் முறையாக இந்த வருடம் தேவர் நினைவிடம் செல்வது முக்கிய கவனத்தை பெற்று வருகிறது..
அதிரும் களம்: கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் மாநாட்டை நடத்தியபோது, கோரிப்பாளையத்திலேயே இருக்கும், தேவர் சிலைக்கு ஏன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவில்லை? என்ற விமர்சனங்கள் எழுந்தவாறே இருந்தது. ஆனால், இப்போது தேவர் ஜெயந்திக்காக மதுரை செல்கிறார் எடப்பாடி பழனிசாமி..
அடுத்தடுத்த எடப்பாடியின் இந்த நடவடிக்கைகளினால், ஓபிஎஸ், டிடிவி தினகரன் டீம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாம். எனினும், இவைகள் எல்லாம் முக்குலத்தோர் ஓட்டுக்களை அதிமுகவுக்கு பெற்றுத்தருமா? என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.
ஒருபக்கம் திமுகவின் சிறுபான்மை ஓட்டுக்களை, அதிமுக பக்கம் இழுத்து வரும் முயற்சியில் எடப்பாடி இறங்கி வரும்நிலையில், மறுபக்கம் முக்குலத்தோர் வாக்குகளையும் குறி வைத்து அரசியல் செய்ய துவங்கியுள்ளது, ஓபிஎஸ், டிடிவி தினகரன் டீம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாம்.
வாக்கு சதவீதம்: இதே தேவர் ஜெயந்திக்காக, ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றோர் வருகை தருவார்கள் என்றாலும், எடப்பாடியின் இந்த மதுரை வருகைக்காக, ஜரூர் ஏற்பாடுகளை அமர்க்களப்படுத்தி வருகிறது மதுரை அதிமுக.. ஆனால், இவைகள் எல்லாம் முக்குலத்தோர் ஓட்டுக்களை அதிமுகவுக்கு பெற்றுத்தருமா? என்பதுதான் தெரியவில்லை.
இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. இந்த முறை தேவர் ஜெயந்திக்காக தலைவர்கள் வருகை தரஉள்ள நிலையில், சசிகலாவை, சில முக்கிய புள்ளிகள் சந்தித்து பேசப்போவதாகவும் சொல்கிறார்கள்.. இப்படித்தான், ஓபிஎஸ்ஸூம் சசிகலாவை சந்திப்பார் என்று கடந்த 2 வருடங்களாகவே சொல்லி வருகிறார்கள். இந்த முறையாவது, பசும்பொன்னில் இந்த சந்திப்பு நிகழுமா? என்று தெரியவில்லை. அதேசமயம், நடந்தவரும் நிகழ்வுகளையெல்லாம் பாஜகவின் கவனம் குவிந்து
வருகிறதாம்.
-
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications