கோடீஸ்வரரை பிச்சைக்காரர் ஆக்கினேனா? என்னை மிகவும் பாதித்து விட்டது.. வேதனையுடன் பேசிய செல்லூர் ராஜூ
சென்னை: என் பொதுவாழ்க்கையை களங்கம் விளைவிக்கும் அளவிற்கு ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. என்னுடைய உள்ளத்தையும் மிகப்பெரிய அளவில் பாதித்தது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வேதனையுடன் பேசியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் ஊழல் காரணமாக 100 பேருக்கும் மேல் பணிபுரிந்து வந்த தனது ஐடி நிறுவனத்தையே மூடி தற்போது வீடு இன்றி பிளாட்பார்முக்கு வந்துவிட்டதாக தொழிலதிபர் வேதனை தெரிவித்து முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து உள்ளார். கடந்த சில நாட்களாக இந்த தொழில் அதிபர் குறித்த செய்திகள் இணையத்திலும் செய்தி ஊடகங்களிலும் வெளியாகி வந்தது.

இந்த நிலையில், தான் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் என்று தொழில் அதிபர் குறிப்பிட்டதால் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை தொடர்பு படுத்தி செய்திகள் வெளியான சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த செல்லூர் ராஜூ கூறியிருப்பதாவது:- முழுக்க முழுக்க இது என்னுடைய தனிப்பட்ட உரிமையை பாதிக்கிற.. தனிப்பட்ட வாழ்க்கையை களங்கம் விளைவிக்கின்ற ஒரு நிகழ்வு ஊடகத்திலும் பத்திரிக்கையிலும் வந்திருக்கிறது.
அதுவும் சட்டமன்ற கூட்டம் தொடங்குகின்ற அன்றைக்கு வந்திருக்கிறது. வேண்டும் என்றே பத்திரிகையில் அதனை போட்டு இருக்கிறார்கள். நான் ஒரு தமிழரை, அமெரிக்க வாழ் கோடீஸ்வரரை தெருவுக்கு கொண்டு வந்த மாதிரி போட்டுள்ளனர். 40 ஆண்டு கால என் பொது வாழ்க்கைக்கு களங்கம் விளைவிக்கின்ற வகையில், நேர்மையை கெடுக்கிற மாதிரி, தான் ஆத்மார்த்தமாக பணியாற்றிய அந்த நிகழ்வை எல்லாம் கொச்சைப்படுத்துகிற மாதிரி..
என் பொதுவாழ்க்கைக்கு களங்கம் விளைவிக்கின்ற அளவிற்கு ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. என்னுடைய உள்ளத்தையும் மிகப்பெரிய அளவில் இது பாதித்தது. என் குடும்பத்தையும் பாதித்தது. எனது கழக செயலாளரே நீங்கள் இதற்கு உடனே பதில் கொடுங்க என்று கேட்கக்கூடிய அளவில் அந்த செய்தியின் வலிமை இருந்தது. பொதுவாக கூட்டுறவு தொழிலில் 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்திருக்கிறேன் என்றால் என்னுடைய நேர்மையையும் வலிமையையும் வேரு ஒருவர் சொல்லி தெரிய வேண்டியது இல்லை..
பொதுவாக கூட்டுறவு துறையில் எது கொள்முதல் செய்வதாக இருந்தாலும் அதிகாரிகள் அடங்கிய குழு தான் டெண்டர் கமிட்டியில் இருப்பார்கள். இவர்கள் தான் விதிகளின் படி தரம் அறிந்து கொள்வார்கள். அதன் அடிப்படையில் துறை அமைச்சர்கள் எந்த விதமான பதிலுக்கும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்கள் அந்த தரத்தின் அடிப்படையில் தான் அவர்கள் அந்த பொருளை கொள்முதல் செய்வது தான் வழக்கம். அந்த கமிட்டியின் வழக்கம் அதுதான். இவ்வாறு அவர் கூறினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications