கிளாம்பாக்கம் இப்படித்தான் இருக்கணும்.. திடீரென போன மக்களுக்கு! காத்திருந்த சர்ப்ரைஸ்! அசத்திட்டாங்க
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு புதிதாக சென்ற மக்களுக்கு சர்ப்ரைஸ் சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். ஆசியாவில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாக இது உள்ளது. இங்கே பேருந்து ஏற தினமும் ஒன்றரை லட்சம் பேர் வருகின்றனர்.
அசத்தலான பேருந்து நிலையம்: சென்னையின் மிகப்பெரிய அடையாளமாகவும் இந்த பேருந்து நிலையம் மாறி உள்ளது. கடந்த 30.12.2023 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை பொது மக்களின் வசதிக்கேற்ப, 30.01.2024 முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 90 சதவிகித அரசுப் பேருந்துகள் மற்றும் மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 10 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பேருந்து நிலைய தூய்மை: தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாரை நியமிக்கும்.
இந்த நடவடிக்கை பயணிகளுக்கு தரமான சேவையை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நாட்டிலேயே சிறந்த பேருந்து நிலையமாக இது இருக்க வேண்டும் , உலக தரத்திற்கு இணையாக வளாகத்தை பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இப்படி தனியாரிடம் வழங்கப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகள் + 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.
சுவாரசிய சம்பவம்: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு புதிதாக சென்ற மக்களுக்கு சர்ப்ரைஸ் சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. அதன்படி அங்கே ஆண், பெண் மட்டுமின்றி திருங்கங்கைகளுக்கு என்று தனியாக கழிப்பறை அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒரு பேருந்து நிலையத்தில் ஆண், பெண் மட்டுமின்றி திருங்கங்கைகளுக்கு என்று தனியாக கழிப்பறை அமைக்கப்பட்டு உள்ளது. இதை பார்த்த பலரும் சர்ப்ரைஸாக பகிர்ந்து வருகின்றனர்.
சிரமம்: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு முன் பயணிகள் சாலையை கடக்க போதிய வசதி இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
பேருந்து நிலையத்திற்கு எதிரே இறக்கிவிடப்படும் சிலர் பேருந்து நிலையத்திற்கு ஜிஎஸ்டி ரோட்டை கடந்து செல்ல வேண்டும். ஆனால் சாலையை கடக்க அங்கே போதிய வசதி இல்லை. ஜீப்ரா கிராஸிங் இல்லை. சாலையில் சிக்னல் இல்லாமல் இருந்தது. தற்போது இங்கே ஒரு சிக்னல் இல்லாமல் வரிசையாக நிறைய சிவப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு டேஞ்சர் விளக்குகள் பொருத்தப்பட்டு சாலையை கடக்க.. வாகனங்களை மெதுவாக்க வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
இத்தனை நாட்கள் மக்கள் சாலையை கடப்பது மிகவும் சிரமமான விஷயமாக இருந்தது. இதனால் உடனே அங்கே தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. தற்போது அங்கே வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அசத்தலான வசதி: விமான நிலைய மாதிரியை போல இந்த பேருந்து நிலையத்தை இயக்க உள்ளனர். விமான நிலையம் இப்படி தனியாரிடம் விடப்படுகிறது. அதை தனியார் அமைப்புகள் சரியாக இயக்கியும் வருகின்றன. முக்கியமாக சுத்தமாக பயன்படுத்துவது தொடங்கி பல்வேறு அடிப்படை பணிகளை தனியார்கள் சிறப்பாக செய்கின்றன. 24 மணி நேரமும் பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தனியாரிடம் ஒப்படைக்கும் போதே இது சாத்தியம் ஆகும். இதற்காக சில தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களிடம் ஒப்பந்தங்கள் கொடுக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள 105 கடைகள், பார்க்கிங், நுழைவு கட்டணம் மற்றும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்தி, இந்த டெர்மினஸ் நாட்டிலேயே சிறந்ததாகப் பராமரிக்கப்படும் என்று கூறப்படுகிறது
அதே சமயம் தனியார் பராமரிப்பு கண்காணிக்கப்பட வேண்டும். தனியார் நிறுவனம் அதிக வாகன நிறுத்தம்/நுழைவு கட்டணத்தை வசூலிப்பதன் மூலம் பொதுமக்களை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஹோட்டல்களில் உணவுக்கான விலையும் கட்டுப்படியாக வேண்டும். இதற்கான ஆலோசனைகளையும் செய்து வருகிறோம். இதை அரசு தொடர்ந்து கண்காணிக்கும்.
புனேவை சேர்ந்த பிவிஜி நிறுவனம் ஒன்று இந்த பேருந்து நிலையத்தை நிர்வகிக்கும். இதே நிறுவனம்தான் குடியரசு தலைவர் அலுவலகத்தையும் நிர்வகிக்கிறது. கிளாம்பாக்கம் டெர்மினஸின் உட்புறம் தயாராக உள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications