இது என்ன சூதாட்ட கிளப்பா.. டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியருக்கு ஹைகோர்ட் கண்டனம்
சென்னை: தொழிலாளர் நீதிமன்றங்கள் சூதாட்ட களமல்ல என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உரிய விடுப்பு அனுமதியின்றி, 1990 ஜூன் முதல் 1991 ஏப்ரல் வரை 10 மாதங்கள் பணிக்கு வராததால் துப்புரவு பணியாளர் பென்சிலய்யாவை பணிநீக்கம் செய்து சென்னை மாநராட்சி, 1993ல் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து பென்சிலய்யா 14 ஆண்டுகள் கழித்து 2007ல் சென்னை தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த 2வது கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம், பென்சிலய்யாவை பணிநீக்கம் செய்த உத்தரவை உறுதி செய்து, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. கடந்த 2012ல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து பென்சிலய்யா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், பணிநீக்கத்தை எதிர்த்து 14 ஆண்டுகள் கழித்து வழக்கு தொடர, தொழிலாளர் நீதிமன்றம் சூதாட்ட களமல்ல என கண்டனம் தெரிவித்தார்.
மேலும், பணி தொடர்பான வழக்குகளை மூன்று ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தொழில் தகராறு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, பென்சிலய்யாவை பணி நீக்கம் செய்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.
அதேசமயம், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகையை 2007 முதல் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் 15 நாட்களுக்குள் வழங்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications