திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை.. ஹைகோர்ட்
சென்னை: திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு வருகிற 24ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சங்கத்தை சேர்ந்த சபேசன் என்பவர் சார்பாக வக்கீல ஜோதி குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில், சங்க விதிகளை மீறி தேர்தல் நடக்கிறது இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தற்காலிக உறுப்பினர்களுக்கும் மற்றும் இணை உறுப்பினர்களுக்கும் வாக்களிக்க உரிமை வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டுவந்து தீர்மானத்திற்கு சங்கங்களின் பதிவாளரிடம் ஒப்புதல் பெறாத நிலையில் தேர்தலை நடத்த முடியாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை கேட்ட நீதிபதி தண்டபாணி இசை கலைஞர்கள் சங்கத்துற்கு வருகிற 24ம் தேதி ஞாயிற்றுகிழமை தேரத்ல் நடத்தை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications