பென்சன்.. அதிகாரிக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட் .. சாதித்த 97 வயது சுதந்திர போராட்ட வீரர்
சென்னை: 97 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட, ஓய்வூதிய நிலுவையை பொது (அரசியல் ஓய்வூதியம்) துறை கூடுதல் செயலாளர் வழங்கவில்லை. இதையடுத்து அந்த அரசு அதிகாரிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கெடுத்திருந்திருக்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 97 வயதாகும் சுதந்திரப் போராட்ட வீரர் வேலு . இவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த 1987ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு, தனக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், 1987-ல் அவர் விண்ணப்பித்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்ற போதும், 2008ஆம் ஆண்டு அளித்த ஒரு விண்ணப்பத்தை கருத்தில் கொண்டு, 2008 முதல் 2021 வரைக்கான ஓய்வூதிய பாக்கியை வழங்க வேண்டும் எனறு தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு கடந்த 2022ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சுதந்திர போராட்ட வீரர் வேலு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், உத்தரவை அமல்படுத்த 10 நாட்கள் அவகாசம் வழங்கினார். ஆனாலும் ஓய்வூதிய பாக்கி தொகையை 97 வயதாகும் சுதந்திர போராட்ட வீரர் வேலுக்கு வழங்கப்படவில்லை.
இதையடுத்து வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி அனிதா சுமந்த், பொதுத்துறை கூடுதல் செயலாளர் அந்தோணிசாமிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூடுதல் செயலாளர் அந்தோணிசாமியை ஜூலை 8-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் சென்னை காவல்துறை ஆணையருக்கு நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார்.
97 வயது சுதந்திரப் போராட்ட வீரர் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு துறையின் உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications