தூத்துக்குடி மேயர் பதவி- எஸ்சி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ததை எதிர்க்கும் வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியை எஸ்.சி. பெண்களுக்கு ஒதுக்கீடு செய்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியை பட்டியலின பெண்களுக்கு (எஸ்.சி) ஒதுக்கீடு செய்து, 2019 டிசம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி பனங்காட்டு படை கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், 2008ம் ஆண்டு உதயமான தூத்துக்குடி நகராட்சியின் மேயர் பதவி, பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து 2011ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் தமிழ்நாடு பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி எல்லை மறுவரையறை மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின்படி, தொடர்ந்து இரு முறை அதாவது 10 ஆண்டுகள் இந்த இடஒதுக்கீடு அமலில் இருக்க வேண்டும் எனவும், அந்த ஒதுக்கீட்டு காலம் 2021 வரை உள்ள நிலையில் திடீரென மேயர் பதவியை பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கி பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில், ஏழு வார்டுகள் மட்டுமே பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில், பொதுப்பிரிவினருக்கே மேயர் பதவியை ஒதுக்க வேண்டும் எனவும், பட்டியலினத்தவத்களுக்கு ஒதுக்கீடு செய்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் ஹரிநாடார் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இம்மனுவுக்கு பிப்ரவரி 25ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
உச்ச நீதிமன்றம் செல்வேன்.. இறுதியில் வெற்றி எனக்கே! நம்பிக்கையோடு சொன்ன இன்பதுரை -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
பக்ரீத் பண்டிகை: பசு, கன்றுகள் வதைக்கு தடை.. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதாக தமிழக அரசு விளக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications