Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை கடற்படையை ஏன் தடுக்கல? மத்திய அரசு பதிலளிக்கனும் - மீனவர்கள் கைது வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடந்து வரும் நிலையில் அதை தடுக்க ஏன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுககும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

HC questioned the Union government why didnt stop Sri Lanka from arresting Tamil Nadu fishermen

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், மேலும் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த பிரச்னை குறித்து தீர்வு காண மத்திய - மாநில அரசுகள் இணைந்த கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பிஎஸ் ராமன், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் அனுப்பி இருக்கிறார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். மத்திய அரசுத் தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், தூதரக அளவில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க அவகாசம் வேண்டும் எனக் கோரப்பட்டது

இதையடுத்து, மீனவர்கள் கைது நடவடிக்கை என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது எனத் தெரிவித்த நீதிபதிகள், இதை தடுக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஏன் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்கிறது எனவும் கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+