கோவை- குழந்தைகள் கொலை வழக்கில் மனோகரனின் தூக்கு தண்டனையை டிச.2-ல் நிறைவேற்ற இடைக்கால தடை
Recommended Video
சென்னை: கோவையில் குழந்தைகளை கடத்தி படுகொலை செய்த மனோகரனின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கோவையில் 2010-ம் ஆண்டு 10 வயது சிறுமி, 7 வயது சிறுவன் ஆகியோர் கடத்தி படுகொலை செய்யப்பட்டனர். இதில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக ஓட்டுநர் மோகன்ராஜ், அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது இந்த வழக்கு.
இவ்வழக்கு விசாரணையின் போது மொகன்ராஜ், போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டார். மனோகரன் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இதில்ல் 2012-ல் கோவை நீதிமன்றம் மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோகரன் மேல்முறையீடு செய்தார். ஆனால் மனோகரனின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனோகரன் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. மனோகரனை டிசம்பர் 2-ந் தேதி தூக்கிலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே கருணை மனு கோரி ஆளுநருக்கு மனு அளிக்க அவகாசம் வழங்காமல் தூக்கு தண்டனையை நிறைவேற்ற கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோகரன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனோகரனின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications