மே முழுவதும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க ஹைகோர்ட் முடிவு
சென்னை: கொரோனா பரவலை தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மே மாதம் முழுவதும் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் வழக்குகளை விசாரி்க்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க லாக்டவுன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் வழக்குகளை விசாரித்து வருகின்றன. இந்நிலையில், மே மாதம் வழக்கமாக விடப்படும் கோடை விடுமுறையை தள்ளிவைப்பது என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

தற்போது, வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மே 3ந் தேதிக்குப் பின் ஊரடங்கு தளர்த்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நேற்று கூட்டினார்.
இந்த கூட்டத்தில், மே மாதத்தில் வழக்கமான நீதிமன்ற பணிகளை மேற்கொள்வதற்கு பதில், இரண்டு இரு நீதிபதிகள் அமர்வும், 10 தனி நீதிபதிகளும் வழக்குகளை, வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, மதுரைக் கிளையில் நீதிபதிகள், தங்கள் அறைகளில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கீழமை நீதிமன்றங்கள் விவாகரத்து வழக்குகள், போக்சோ வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள் மற்றும் ஜாமீன் - முன் ஜாமீன் மனுக்கள் போன்ற வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிப்பது எனவும், நீதிமன்ற பணியாளர்களை ஷிப்ட் முறைப்படி பயன்படுத்த அனுமதிப்பது எனவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், கொரோனா பரவல் காரணமாக, கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் வருடாந்திர பணிமாற்றம் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பது எனவும் நீதிபதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications