சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விசாரணைக்கு ஆஜராகாத காவல்துறை அதிகாரிகள்.. ஹைகோர்ட் எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: எதிர்காலங்களில் வழக்கு விசாரணைக்கு காவல் துறை அதிகாரிகள் ஆஜராகவில்லை என்றால் டிஜபி மற்றும் காவல்துறை ஆணையர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் ஆஜராகாததால், வரும் 13-ம் தேதி டிஜிபி மற்றும் காவல் ஆணையர் நேரில் ஆஜராக நீதிபதி வேல்முருகன் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

hc warns police department for not appearing in cases

இந்நிலையில், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி நீதிபதி வேல்முருகனிடம் அரசு வழக்கறிஞர் முறையிட்டார்.

காவல் அதிகாரிகள் நீதிமன்றங்களில் சரியான நேரத்தில் ஆஜராக டிஜபி மற்றும் காவல் ஆணையர்கள் அறிவுறுத்திய இருப்பதாகவும், இதுபோன்று திரும்ப நடைபெறாது என்றும் தெரிவித்தார்..

இதனை ஏற்று கொண்ட நீதிபதி, டிஜிபி மற்றும் காவல் ஆணையர் நேரில் ஆஜராக விலக்களித்து உத்தரவிட்டார்.

தபெதிகவினர் 92 பேர் மீதான வழக்கு.. ரத்து செய்தது ஹைகோர்ட்தபெதிகவினர் 92 பேர் மீதான வழக்கு.. ரத்து செய்தது ஹைகோர்ட்

மேலும், எதிர்காலத்தில் வழக்கு விசாரணைக்கு காவல் துறை அதிகாரிகள் ஆஜராகவில்லை என்றால் டிஜபி மற்றும் காவல்துறை ஆணையர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

English summary
Madras HC has warned Police department for not appearing in Court for various cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X