மீனில் ஓரியா தெரியுமா... ராமேஸ்வரத்தில் ஆச்சரியம்.. அதென்ன ஆரஞ்சு கலர்ல இருக்கு.. மருத்துவ விளை மீன்
சென்னை: ராமேஸ்வர மீனவர்கள் படுகுஷியிலும், மகிழ்ச்சியிலும் இருக்கிறார்கள்.. என்ன காரணம் தெரியுமா? ஏகப்பட்ட மீன்கள் வலையில் விழுந்துள்ளன.. அதிலும், ஒரு குறிப்பிட்ட மீன்களை பார்த்ததுமே ஆனந்தமாகிவிட்டனர்.
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.. தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதால், ராமேஸ்வரம், பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.. அதனால்தான், கடந்த ஜூலை 17 முதல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவும் மீன்துறை தடை விதித்திருந்தது..
டோக்கன் : இந்நிலையில் ஜூலை 22ல் காற்றின் வேகம் ஓரளவு தணிந்தது.. இதையடுத்து, ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்களுக்கு, மீன்பிடிக்க செல்வதற்காக மீன்துறையினர் அனுமதி டோக்கன்களை வழங்கினார்கள்.. 5 நாட்களுக்கு பிறகு, மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நேற்று காலையில் கரைக்கு திரும்பினார்கள்.. இதில் பெரும்பாலான படகில் காரல், பாரை, விளமீன் போன்றவை அதிகமாக கிடைத்திருப்பதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதாவது, ராமேஸ்வரத்தில் மொத்தம் 700 படகுகள் உள்ள நிலையில், 516 படகில் மீன்பிடிக்க சென்றதால்தான், இந்த அளவுக்கு அதிகமாக மீன்கள் கிடைத்தது என்கிறார்கள் இதில், ஓரியா என்ற மீன் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது, அந்த மீன் இப்போது அதிகமாக கிடைத்ததை நெகிழ்வுடன் சொல்கிறார்கள்.
ஓரியா மீன்: அதென்ன ஓரியா மீன்? மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் வாழக்கூடிய அரிதாக மீன்களாகும்.. விளைமீன்களிலேயே முதன்மையானதும்கூட.. இந்த மீன் வேகமாக நீந்தக்கூடியது.. மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தி செல்லுமாம்.. ஒரு மீன் குறைந்தது 5 கிலோ வரையில் இருக்குமாம்.
பாம்பன் மீன்பிடி தெற்கு துறைமுகத்திலிருந்து மன்னர் வளைகுடா ஆழ்கடல், தென்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் சென்றால், அவர்களுக்கு இந்த மீன்கள் கிடைக்கும்.. இந்த மீனின் சிறப்பு என்னவென்றால், மற்ற மீன்களைப் போல முட்கள் இருக்காது.. ஆனால், நடுவில் மட்டும் முதுகு தண்டு போன்று இருக்கும்.. உடல் முழுவதும் சதைகளை உடையது.செதில்கள் பார்ப்பதற்கு டைமண்ட் ஷேப்பில் இருக்கும். செதில்கள் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
சர்க்கரை நோய்: ஆங்கிலத்தில் Emperor என்பார்கள்.. அதிக ருசியை தரக்கூடியது மட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இந்த ஓரியா மீனில் உள்ளது.. இதயநோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம்.. நிறைய புரோட்டீன் நிரம்பி உள்ளது.. ஆனால், இந்த மீன் கொஞ்சம் காஸ்ட்லி.. கிலோ ரூ.300க்கு குறைந்ததே கிடையாது.
ராமேஸ்வரம் பகுதியில் இருந்துதான், கேரளா, தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.. அத்துடன், மதுரை, திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல்களுக்கும், இவை அனுப்பி வைக்கப்படுகின்றன என்பது ஓரியா மீனுக்கான கூடுதல் விசேஷம்.












Click it and Unblock the Notifications