குழந்தையின் பாலினத்தை அறிவித்த இர்பான்.. நுங்கம்பாக்கம் வீட்டில் சுகாதாரத் துறை நேரில் விசாரணை
சென்னை: தனது குழந்தையின் பாலினத்தை வெளியிட்டதாக வீடியோ வைரலான நிலையில் யூடியூபர் இர்பானிடம் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் குழந்தை பிறக்கும் முன்னர் அது ஆணா, பெண்ணா என்ற விவரத்தை வெளியிடுவது சட்டவிரோதம். இது போன்ற அறிவிப்பை எந்த வகையிலும் மருத்துவரோ, ஸ்கேன் செய்யும் டாக்டர்களோ, அறிவிக்கக் கூடாது என்பதுதான் சட்டம்.

இவ்வாறு அறிவித்தால் டாக்டர், குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்கள் மீது அபராதத்துடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஒவ்வொரு மகப்பேறு மருத்துவமனைகளிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் யூடியூபர் இர்பான், தனது மனைவியின் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை வெளிநாட்டில் சோதனை செய்து அறிவித்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Gender reveal party என்பதை வைத்து தனக்கு என்ன குழந்தை பிறக்க போகிறது என்பதை மருத்துவ அறிக்கையுடன் இர்பான் வெளியிட்டிருந்தார்.
அண்மையில் கோடை விடுமுறைக்காக இர்பானும் அவருடைய மனைவி ஆலியாவும் துபாய் சென்றிருந்தனர். அங்கு ஒரு மருத்துவமனையில் வைத்து தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்தார். ஸ்கேன் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையுடன் பார்ட்டி ஒன்றை வைத்து குழந்தை என்ன என்பதை அறிவித்தார். இதை வீடியோவாகவும் அவருடைய சேனலில் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியது. அது போல் குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கும் இர்பானுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்த நோட்டீஸுக்கு முன்னதாகவே இர்பான் அந்த வீடியோவை தனது சேனலில் இருந்து நீக்கிவிட்டார்.

இதையடுத்து மன்னிப்பு கோரி வீடியோ வெளியிடுவதாகவும் இர்பான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இர்பானின் வீட்டில் சுகாதாரத் துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட குழந்தை பாலினம் தொடர்பாக அறிவதை பகிரங்கமாக வெளியிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மருத்துவ குழு யூடியூபர் இர்பான் மன்னிப்பு கோரினாலும் அவருடைய குழந்தை பாலினம் குறித்து பதிவிட்டதற்கு உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications