மயக்கமான அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. மருத்துவமனையில் ஆஞ்சியோ பரிசோதனை.. நலமுடன் திரும்பினார்
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து மா.சுப்ரமணியன் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்.
அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று தனது வீட்டில் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தபோது லேசான மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் உடனடியாக கிண்டியில் உள்ள கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் . அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட செயலாற்றி வருபவர் அமைச்சர் மா. சுப்பிரமணியன். இவர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருவதுடன், மருத்துவம் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதேசமயம் உடல்நலனிலும் அக்கறையுடன் செயல்பட்டு வரும் இவர் நடைபயிற்சி, உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்றைய தினம் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனிடைய அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மா.சுப்ரமணியனுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவரது ஆஞ்சியோ பரிசோதனை முடிவில் எந்த வித அடைப்பும் இல்லை என்று தெரியவந்தது. இதனையடுத்து அமைச்சர் மா. சுப்ரமணியன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications