தோண்ட தோண்ட சிறையில் பூத்த சின்ன காதல்.. நேருக்கு நேர் பார்த்த ஜோடி.. ஆயுள் கைதியுடன் கலந்த அதிசயம்
சென்னை: காதலுக்காக ஜெயிலுக்கு போவார்கள்.. ஆனால் ஜெயிலிலேயே காதல் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படித்தான் ஒரு விசித்திரமான காதல், ராஜஸ்தான் மாநிலத்தில் மலர்ந்துள்ளது.. அந்த காதல் கைதிகளுக்கு கல்யாணமும் நடக்க போகிறது.. இதை பற்றிதான் ஊரே பேச்சாக இருக்கிறது.. யாரந்த காதல் ஜோடி?
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் நேகா.. இப்போது 34 வயதாகிறது.. அன்று மாடலிங் செய்து வந்த நேகா திக்ஷந்த் கம்ரா என்ற இளைஞரை காதலித்து வந்தார்.. ஆனால் காதலன் நிறைய கடனில் சிக்கி தவித்து வந்தார்..

இந்த நேரத்தில்தான் நேகாவுக்கு டேட்டிங் ஆப் மூலம், துஷ்யந்த் சர்மா என்பவர் கடந்த 2018-ல் பழக்கமானார்.. அப்போது, புதிய காதலனை கடத்தி பணத்தை பறித்து, அதன்மூலம் பழைய காதலனின் கடனை அடைக்க நேகா திட்டமிட்டார்..
மாடலிங் பெண் - காதல்
இதற்காக சம்பவத்தன்று சர்மாவை, தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து 3 லட்சம் பணம் வாங்கி உள்ளார்.. பிறகு காதலனுடன் சேர்ந்து அங்கேயே சர்மாவை கொலை செய்தார் நேகா.. யாரிடமும் மாட்டி கொள்ளகூடாது என்பதற்காக, ஷர்மாவின் முகத்தில் ஏராளமான கத்திக்குத்து காயங்களையும் ஏற்படுத்தினார் நேகா..
பிறகு இருவரும் சேர்ந்து ஷர்மாவின் சடலத்தை சூட்கேஸ் ஒன்றில் அடைத்து மலையில் இருந்து கீழே போட்டுவிட்டனர்.. எனினும் சூட்கேஸில் சடலம் நேகாவை காட்டி தந்துவிட்டது.. இறுதியில் நேகா உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.. அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.. 7, 8 வருடங்களுக்கு முன்பு, இந்த நேகா சூட்கேஸ் வழக்கு பரபரப்பாக அன்று நாடு முழுவதும் பேசப்பட்டது நினைவிருக்கலாம்.
இதேபோல மற்றொரு சம்பவம்
ஆல்வார் நகரை சேர்ந்த ஹனுமான் என்பவர் சந்தோஷி என்ற விளையாட்டு வீராங்கனையை காதலித்து வந்தார். ஹனுமானை விட சந்தோஷிக்கு 10 வயது அதிகம்.. அதுமட்டுமல்ல, சந்தோஷிக்கு திருமணமாகி 3 குழந்தைகளும் இருந்தன...
எனினும் சந்தோஷி - ஹனுமான் கள்ளக்காதல் வளர துவங்கியதால், கணவனை கொன்றுவிட்டார்கள்.. ஆனால் சந்தோஷின் 3 பிள்ளைகளும் இதை பார்த்துவிட்டனர்.. உடனே தன்னுடைய 3 குழந்தைகளையும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றார் சந்தோஷி.. இதையடுத்து, இவர்களுக்கும் ஜெயில் தண்டனை தரப்பட்டது..
அதாவது மேற்கண்ட இரு வேறு, வேறு சம்பவங்களிலும் நேகா, ஹனுமான் இருவருமே 2023ல் ஆயுள் தண்டனையை பெற்றனர்.. இதையடுத்து இவர்கள் 2 பேருமே ஜெய்ப்பூர் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
15 நாள் பரோல் தந்த கோர்ட்
கடந்த 6 மாதத்திற்கு முன்பு, திறந்த வெளியில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தபோது, நேகாவிற்கு ஹனுமானுடன் அறிமுகம் ஏற்பட்டது. இதுவே நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. பகல் நேரத்தில் ஜெயிலின் வெளியில் வேலை செய்தனர்... அப்போது இந்த காதல் வலுவானது.. இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்..
இதற்காக இருவரும் ராஜஸ்தான் ஹைகோர்ட்டில் தங்களது திருமணத்திற்கு பரோல் கொடுக்கும்படிகேட்டு விண்ணப்பித்தனர்.. அவர்களது மனுவை விசாரித்த கோர்ட்டும் 3 பேருக்கும் 15 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி நேகா மற்றும் ஹன்மான் இருவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் இனிதே நடந்துள்ளது..!!
வேறு வேறு கொலை வழக்கில் ஜெயிலுக்கு சென்றவர்கள், இன்று வாழ்க்கையில் ஒன்றிணைந்துள்ளனர்..
கிளம்பிய விவாதங்கள்
ஆனால் இந்த கைதிகளின் திருமணம் சில விவாதங்களை சோஷியல் மீடியாவில் எழுப்பி உள்ளது.. கைதிகளுக்கும் காதல் உரிமை இருக்க வேண்டும், இது மனிதாபிமான முடிவு என சிலர் பாராட்டுகிறார்கள். ஆனால் மேலும் சிலர், கடுமையான குற்றச்சாட்டில் உள்ளவர்கள் தண்டனை பெற்றவர்கள், திருமணம் செய்ய அனுமதி பெறுவது சரியா? என்றும் கேள்வி கேட்கிறார்கள்..
எது எப்படியோ, சிறையில் பூத்த காதல், நீதிமன்ற அனுமதியுடன் திருமணமாக மாறியிருப்பது நம்முடைய இந்தியாவில் அரிதான விஷயமே...!!!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications