மர்மமா இருக்கே! விண்வெளியிலிருந்து வந்த "ஹார்ட்-பீட்" சிக்னல்? ஒரே குழப்பம்! திகைத்த விஞ்ஞானிகள்
சென்னை: விண்வெளியில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அதிலும் கடந்த இரண்டு நாட்களாக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட தொடக்க கால பிரபஞ்ச தொகுப்பின் புகைப்படங்கள், தெற்கு ரிங் புகைப்படங்கள் விண்வெளி குறித்த விஞ்ஞானிகளின் கண்ணோட்டத்தையே மாற்றி உள்ளது. அந்த வகையில்தான் தற்போது விண்வெளியில் இருந்து வந்த ரேடியோ சிக்னல் ஒன்று விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
Recommended Video
என்னது ரேடியோ சிக்னலா? ஸ்பேசில் யார் பாஸ் எஃப்எம் ஸ்டேஷன் வைத்து இருப்பது என்று கேட்க வேண்டாம். ரேடியோ சிக்னல் என்பது ஸ்பேஸ் முழுக்க பரவிக்கிடக்கிறது. இதை நாம் கடந்த 15 வருடமாக ரெக்கார்ட் செய்தும் வருகிறோம்.
இந்த ரேடியோ சிக்னல் எப்படி உருவாகிறது என்பதில் நிறைய விதமான கருத்துக்கள் உள்ளன. இந்த ரேடியோ சிக்னல் பல்வேறு வகைகளில் உருவாகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ரேடியோ சிக்ன
எம்ஐடி பல்கலை விஞ்ஞானிகளின் கூற்றுப்படி.. தூரத்தில் பல ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு பிரபஞ்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் பெரிய வெடிப்பு ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் . இது போன்ற வெடிப்புகள் ஏற்படுத்தும் அலைகள், பெரிய ரேடியோ அலைகளை ஏற்படுத்தும். இந்த அலைகள்தான் ஸ்பேசில் பரவி பூமிக்கும் வந்து சேரும். ஆனால் பிரபஞ்சங்களில் ஏற்படும் வெடிப்பு மட்டுமின்றி வேறு விஷயங்களும் இது போன்ற ரேடியோ சிக்னலுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

FRB
இது போன்ற சிக்னல்களை fast radio burst அதாவது FRB என்பார்கள். வெடிப்புகள் காரணமாக ஏற்படும் வேகமான ரேடியோ அலைகள்தான் FRB. இதை பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தும் கூட ரெக்கார்ட் செய்ய முடியும். 2007ல் முதலில் FRB கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து பல முறை FRB கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில FRB சிக்னல்கள் 16 நாட்களுக்கு ஒரு முறை பதிவாவதும் கூட குறிப்பிடத்தக்கது.

புதிய FRB சிக்னல்
அந்த வகையில்தான் தற்போது புதிய FRB சிக்னல் ஒன்று பதிவாகி உள்ளது. இது போன்ற FRB சிக்னல்கள் சில மில்லி செகண்ட் மட்டுமே இருக்கும். அதே சமயம் சூரியன் 3 நாட்களில் வெளிப்படுத்துவதற்கு இணையான ஆற்றலை கொண்டு இருக்கும். ஆனால் பூமிக்கு வரும் போது இதன் ஆற்றல் மிக குறைவாக இருக்கும். உதாரணமாக நிலவில் ஒரு போனை வைத்து அதை இங்கிருந்து ரீச் செய்ய முயன்றால் எவ்வளவு குறைவான சிக்னல் இருக்குமோ அவ்வளவு குறைவான ஆற்றலையே பூமிக்கு இந்த ரேடியோ சிக்னல்கள் வரும் போது கொண்டு இருக்கும்.

பிரபஞ்சம்
இந்த நிலையில்தான் பிரபஞ்சம் ஒன்றில் இருந்து வரும் FRB சிக்னல்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதான் இதுவரை நாம் கண்டுபிடித்ததிலேயே நீண்ட நேரம் இருந்த FRB சிக்னல் ஆகும். அதோடு விட்டு விட்டு இந்த FRB சிக்னல் ஏற்பட்டுள்ளது. Nature என்ற ஆய்வு பக்கத்தில், peer review செய்யப்பட்ட பின் இந்த FRB சிக்னல் பற்றிய ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

FRB 20191221A
இதற்கு FRB 20191221A என்று பெயர் வைத்துள்ளனர். இது அதிகபட்சம் 3 நொடிகள் வரை நீடித்துள்ளது. 0.2 நொடிகளுக்கு ஒரு முறை விட்டு விட்டு FRB சிக்னல் வந்துள்ளது. அதாவது இதய துடுப்பு போலவே வருவது.. போவது.. வருவது போவது என்று இந்த FRB சிக்னல் கேட்டுள்ளது. இது இதய துடிப்பு போல இருப்பதாக அந்த ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இது ரேடியோ பல்சர் அல்லது மேக்னெட்டர் போன்ற அலையாக இருக்கலாம். இதுதான் மர்மமாக இருக்கிறது.

ஏன் ஏற்பட்டது?
நியூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து வரும் அலையாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர். 2019ல்தான் முதலில் இந்த FRB சிக்னல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் தற்போது அதன் ஆய்வு அறிக்கை முறையாக வெளியிடப்பட்டு உள்ளது. Canadian Hydrogen Intensity Mapping Experiment அல்லது CHIME என்ற தொலைநோக்கி மூலம் இந்த அலை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது எந்த பிரபஞ்சத்தில் இருந்தது வந்தது என்று தெரியவில்லை. தோராயமாக 1 பில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் இந்த பிரபஞ்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது... ஆனால் இது ஏலியன் போன்ற உயிரினம் அனுப்பிய சிக்னலாக இருக்க வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications