"வெப்ப அலை.. உயிருக்கே ஆபத்து.." தகிக்கும் இந்தியா! கோடைக்கு முன்பே இந்த நிலையா.. மிரளும் மக்கள்
சென்னை: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் மிக மோசமானதாக மாறிக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையே இந்தாண்டு வெப்பம் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் நிலையில், அடிக்கடி வெப்ப அலைகள் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது. இது மக்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளனர்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் நிலையில், அடிக்கடி வெப்ப அலைகளை ஏற்படுவதும் அதிகரித்துள்ளது. இது மக்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளனர்.

பிப். மாதம்
1901ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தாண்டு பிப். மாதம் தான் இந்தியா அதீத வெப்பத்தை எதிர்கொண்டது. இதற்கிடையே வரும் வாரங்களில் வெப்பம் மேலும் உயரும் என்று தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்தாண்டே இந்தியாவில் பல இடங்களில் வரலாறு காணாத வெப்ப அலை ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மோசமான பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மீண்டும் அதேபோன்ற நிலை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் பல இடங்களில் வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் (122 ஃபாரன்ஹீட்) வரை உயரும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வியர்வைப் பயன் தராது
நகர்ப்புறங்கள் உள்ளிட்ட பல இடங்களில் காற்றோட்டம் இல்லாத இடங்களில் வசிப்போருக்கு மோசமான பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. வெப்பநிலை உயர்ந்து அதேநேரம் ஈரப்பதம் இருக்கும் போது, வெப்ப அழுத்தம் ஏற்படுகிறது. சஹாரா போன்ற இடங்களை விட இந்தியா பொதுவாக அதிக ஈரப்பதம் கொண்டது. இதன் காரணமாக வியர்வையும் நம்மை இந்த அதீத வெப்பத்தில் இருந்து காப்பாற்றத் தவறுகிறது. உலகிலேயே ஈரமான சூழலுடன் வெப்பம் 35 C என்ற நிலையைத் தாண்டும் உலகின் முதல் பகுதிகளில் ஒன்றாக இந்தியா மாறக்கூடும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

இந்தியா
புவி வெப்பமயமாதலில் இருந்து எந்தவொரு நாடும் தப்பவில்லை என்ற போதிலும், இந்தியா மோசமாகப் பாதிக்கப்படக் காரணம் இருக்கவே செய்கிறது. ஆனால், இந்தியாவில் இதன் பாதிப்பு சற்று மோசமாகவே இருக்கிறது. இது தொடர்பாக ஆய்வாளர் கீரன் ஹன்ட் கூடுதலாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "தொழில் புரட்சி காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் வெப்பம் இப்போது 1.5 செல்சியஸ் அதிகமாக உள்ளது. சில நகரங்களில் கூடுதலாக 2 டிகிரி வெப்பமும் அதிகரித்துள்ளது.

உயிரிழப்புகள்
வட இந்தியாவில் அதிக அழுத்தம் கொண்ட வறண்ட வெயில், பலவீனமான காற்றுடன் ஏற்படும் போது இந்த வெப்ப அலைகள் ஏற்படுகிறது. வெப்ப அலை என்றால் என்ன என்று அரசு வைத்திருக்கும் விளக்கமும், வெப்ப அலை அதிகம் ஏற்படுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. வெப்பம் நீண்ட காலம் இருக்கும் போது, உயிரிழப்புகள் அதிகரிக்கிறது. மக்கள் தொகை அதிகரிப்பும் வெப்ப அலையால் உயிரிழப்புகள் ஏற்பட ஒரு காரணமாகும். இந்தியாவின் சராசரி வெப்பமே அதிகமாக இருக்கிறது.

உயிரிழப்புகள்
வட இந்தியாவில் அதிக அழுத்தம் கொண்ட வறண்ட வெயில், பலவீனமான காற்றுடன் ஏற்படும் போது இந்த வெப்ப அலைகள் ஏற்படுகிறது. வெப்ப அலை என்றால் என்ன என்று அரசு வைத்திருக்கும் விளக்கமும், வெப்ப அலை அதிகம் ஏற்படுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. வெப்பம் நீண்ட காலம் இருக்கும் போது, உயிரிழப்புகள் அதிகரிக்கிறது. மக்கள் தொகை அதிகரிப்பும் வெப்ப அலையால் உயிரிழப்புகள் ஏற்பட ஒரு காரணமாகும். இந்தியாவின் சராசரி வெப்பமே அதிகமாக இருக்கிறது.

சஹாரா
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், மே மாதத்தில், சஹாரா மற்றும் அரேபியப் பகுதிகளில் மட்டுமே வட இந்தியாவுக்கு நிகரான வெப்பம் இருக்கும். அங்கெல்லாம் ஜன நெருக்கடி இந்தளவுக்கு இருக்காது. அவை இரண்டும் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளாகும். ஆனால், இந்தியாவில் ஜன நெருக்கடி ரொம்பவே அதிகம். எனவே, 40 Cக்கு மேல் வெப்பம் சற்று அதிகரித்தாலும் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் நிலத்தில் இருக்கும் ஈரத்தன்மை முற்றிலுமாக வறண்டு போகும் அபாயம் இருக்கிறது. இது விவசாயத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

என்ன செய்யலாம்
இதைத் தடுக்க நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தொடங்க எடுக்கத் தொடங்க வேண்டும். குறிப்பாக மக்கள் தொகை அதிகம் இருக்கும் நகர்ப்புறங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிடங்களில் பசுமையான இடங்கள், காற்றோட்டம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் நகர்ப்புற திட்டமிடல் வழிகாட்டுதல்களைச் செயல்படுத்த வேண்டும். சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் இதைத் தீவிரமாக அமல்படுத்துகிறது. அதேபோல ஏசி இல்லாமல் இயற்கையாக கூலாகும் தொழில்நுட்பங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications