உதயநிதி ஸ்டாலின் போட்ட "அந்த ஒற்றை போட்டோ".. கமெண்ட்டும் இல்லை- ட்விட்டரை திணறடித்த நெட்டிசன்ஸ்!
சென்னை: சனாதன ஒழிப்பு சர்ச்சையில் இன்னமும் விவாதப் பொருளாக இருந்து வரும் தமிழ்நாடு அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் எந்த கமெண்டும் இல்லாமல் கொசுவர்த்தி சுருள் எரியும் படத்தை குறியீடாக போட்டிருப்பதை முன்வைத்து நெட்டிசன்ஸ் அதகளப்படுத்தி வருகின்றனர்.
பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளை கற்பிக்கும் சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல; ஒழிக்கப்பட வேண்டியது என முழக்கம் எழுப்பினார் உதயநிதி ஸ்டாலின். ஒட்டுமொத்த இந்தியாவும் உதயநிதி ஸ்டாலின் பக்கம் திரும்பியது.

பிரதமர் மோடி அமைச்சரவையையே கூட்டி விவாதிக்கிறார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் என சீனியர்கள் தொடங்கி எல்.முருகன் வரை அத்தனை பேரும் உதயநிதிக்கு எதிராக கொந்தளிக்கின்றனர். திமுக இடம்பெற்றுள்ள "இந்தியா" கூட்டணி கட்சிகளும் கூட உதயநிதி ஸ்டாலின் கருத்தை ஏற்க மறுத்தன.
ஆனால் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தங்களது சனாதன ஒழிப்பு கொள்கையில் தெள்ளத் தெளிவாக திட்டவட்டமாக இருப்பதாக அறிக்கைகள் மூலம் ஆணித்தரமாக அறிவித்தனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சனாதனம் குறித்த பேச்சுதான். உச்சநீதிமன்றத்திலும் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பாய்ந்துள்ளது. பல மாநிலங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
— Udhay (@Udhaystalin) September 11, 2023
இந்நிலையில் இன்று தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளை முன்னிட்டு அவரது சொந்த ஊரில் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் தமது ட்விட்டர் பக்கத்தில், ஒரே ஒரு கொசுவர்த்தி சுருள் எரிவது போன்ற படத்தை மட்டும் எந்த கமெண்டும் போடாமல் போட்டுவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.
அப்புறம் என்ன? ட்விட்டரே திக்கி திணறுகிற வகையில் திமுகவினரும் நெட்டிசன்களும் அவரது ட்விட்டர் பக்கத்தில் குவிந்து பல்வேறு யூக கருத்துகளை காட்டாற்று பேரருவி போல கொட்டி வருகின்றனர். சனாதனத்தை ஆதரிக்கும் கொசுக்களைத்தான் இப்படி உதயநிதி பங்கம் செய்துவிட்டார் எனவும் கொண்டாடுகின்றனர்.
ஏற்கனவே தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் போது மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் ஒற்றை செங்கல்லை ஊர் ஊராக தூக்கிக் கொண்டு போய் பிரசாரம் செய்த தாக்கமும் இன்னமும் தொடருகிறது. அன்று பாஜகவையும் அதிமுகவையும் வெல வெலக்க வைத்தது உதயநிதி ஸ்டாலினின் ஒற்றை செங்கல் பிரசாரம். இன்று அதே பாணியில் ஒற்றை கொசுவர்த்தி சுருள் படம்!
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications