பேச்சை நீக்குவதாக சொன்ன சபாநாயகர் அப்பாவு.. கடும் அப்செட் ஆன வேல்முருகன்.. சட்டசபையில் பரபரப்பு!
சென்னை: சட்டசபையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ இன்று கேள்வி எழுப்பிய போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக் கூடாது என அறிவுறுத்தினார். இதற்கு வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடர் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருக்கிறார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் பேசுகையில், “எனது பண்ருட்டி தொகுதியில இருக்கும் நெல்லிக்குப்பம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, அமைச்சரை அழைத்துப் போய் காட்டி, அங்கு ஒரு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை வேண்டும், ஒரு கட்டடம் வேண்டும் என்று கேட்டேன். கட்டடத்தை தந்து இப்போது திறக்கும் நிலைமையில் உள்ளது. மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை ஆக்குவதற்கு ஒன்றிய அரசின் அனுமதியைக் கேட்டிருப்பதாக சொன்னீர்கள்.
அதுவரை அங்கு பழமையான சர்க்கரை ஆலை இருப்பதால், தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்படும்போது, விவசாயிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு போகும்போது, 24 மணி நேரமும் அங்கு டாக்டர்களும், நர்ஸ்களும் பணியில் இருப்பது இல்லை. அவர்களை எந்த நேரமும் பணியில் வைத்திருக்கும் வகையில் அரசாணையை போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. அதை செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “வேல்முருகன்.. கேள்வி நேரத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யாதீங்க.. குறிப்பில் இருந்து நீக்குகிறேன்” எனத் தெரிவித்தார். அப்பாவுவின் இந்த நடவடிக்கைக்கு வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சட்டசபையில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து வேல்முருகன் கோரிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுவாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மருத்துவர் தான் இருப்பார்கள். இரவு நேரங்களில் Call on duty முறையில் தான் வருவார்கள். இருந்தாலும் நெய்வேலி தொழிலாளர்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்வோம்.
இன்னும் ஒரு சில நாட்களில் 1,100 புதிய மருத்துவர்களை நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். MRB தேர்வு முடிவடைந்து இப்போது சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. பணி ஆணைகள் வழங்கப்பட்டதும், அந்த மருத்துவமனைக்கு கூடுதல் பணியிடங்கள் உருவாக்கித் தரப்படும்” எனப் பதில் அளித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications