வேற லெவல்.. செக் வைக்கும் "தங்கம் ".. நம்பவே முடியலையே.. முணுமுணுக்கும் போடிநாயக்கனூர்!
ஓபிஎஸ்-க்கு எதிராக களம் இறங்கி உள்ளார் தங்க தமிழ்செல்வன்
சென்னை: "அவரா இப்படி செய்தார்? நம்பவே முடியவில்லையே" என்ற முனுமுனுப்புகள் போடி தொகுதியில் எழுந்து வருகிறது.. காரணம் திமுக வேட்பாளராக தங்க தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டதுதான்.
வரும் தேர்தலில் துணை முதல்வர் ஓபிஎஸ் போடி தொகுதியில் போட்டியிடுகிறார்.. இவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் களமிறக்கப்பட்டுள்ளார்.
போடி என்றில்லை, ஓபிஎஸ் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிட போவது தங்க தமிழ்செல்வனாகத்தான் இருப்பார். இருவருமே சமபலத்துடன் அன்று ஜெயலலிதா அவையை அலங்கரித்தவர்கள்.. இருவருக்குமே சாதி ஓட்டுக்கள் கை கொடுத்தன.. இருவருக்குமே தொகுதிக்குள் செல்வாக்கு இருக்கின்றன.

வளர்ச்சி
ஆனால், இந்த 4 வருட காலத்தில் ஓபிஎஸ் படுவேகமாக வளர்ந்துவிட்டார்.. தொகுதியிலும் குறிப்பிட்ட கவனத்தை செலுத்தியதாக தெரிகிறது.. பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி, 4 பாலங்கள் என தொகுதி மக்கள் சொல்லும்படியான விஷயங்களை ஓபிஎஸ் செய்திருப்பதாக தெரிகிறது. அதிலும் அதிமுகவின் பயிர் கடன் தள்ளுபடி வேற லெவலுக்கு ஓபிஎஸ்ஸை உயர்த்திவிட்டதாகவே சொல்கிறார்கள்.

திருமங்கலம்
ஆனாலும் "திருமங்கலம் பார்முலா" இல்லாமல் ஒரு தேர்தலை நடத்தி விட முடியுமா.. யாராக இருந்தாலும் திருமங்கலம் பார்முலா கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும் அல்லவா.. எனவே போடியிலும் திருமங்கலம் பார்முலா கையில் எடுக்கப்படுகிறதாம். கடந்த முறை எம்பி தேர்தலின்போது, தங்கதமிழ்செல்வன் தன்னுடைய பிரச்சாரத்திலேயே, "ஓபிஎஸ் தொகுதியின் தெருக்களில் எல்லாம் பணம் இறைந்து கிடக்கிறது" என்றார்..

ஓட்டுக்கள்
இந்த நிலையில் ஒரு முக்கியக் கட்சி சார்பில் ஓட்டுக்கு 2000 என்று கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. ஆனால் தங்கத் தமிழ்ச்செல்வன் வேட்பாளர் என்றதகவல் கிடைத்ததும் இதை 1000 ரூபாயாக குறைத்து விட்டனராம். காரணம், தங்க தமிழ்செல்வன் எப்படியும் மண்ணை கவ்வுவார், தனக்கு வெற்றி வாய்ப்பு என்று அவர்கள் கணக்குப் போட்டுள்ளார்களாம்.

அதிருப்தி
பல சாதகமான விஷயங்கள் இருந்தாலும், ஓபிஎஸ் மீதான அதிருப்திகள் தொகுதிக்குள் உள்ளதையும் மறுக்க முடியாது.. குறிப்பாக வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தந்ததை தென்மண்டல மக்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.. இது ஓபிஎஸ்- ன் தொகுதியிலும் எதிரொலிக்கிறது.. இடஒதுக்கீடு விஷயத்துக்கு எதிரான மனநிலைமையே போடி தொகுதியிலும் உள்ளது.. எனவே, இது நிச்சயம் ஓபிஎஸ்-க்கு எதிரான வாக்குகளில் பிரதிபலிக்கும் என்கிறார்கள்..

பாஜக
அவ்வளவு ஏன், சொந்த சமுதாய வாக்குகளும் இந்த முறை ஓபிஎஸ்-க்கு குறைவாகலாம் என்றும் ஒரு கணிப்பு கூறுகிறது. இதுபோக, பாஜக மீதான வெறுப்பு ஓட்டுக்களும் அதிமுக கூட்டணிக்கு வரும் என்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த தங்கதமிழ்செல்வன் தெம்பாக இருக்கிறாராம்.. எப்படியோ பழம் நழுவி தன் கையில்தான் விழ போகிறது என்றும் பெருத்த நம்பிக்கையில் களப்பணியில் ஈடுபட்டு வருகிறாராம்.. பார்ப்போம்..!
-
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு












Click it and Unblock the Notifications