விடாத வெயில்.. நேற்று செஞ்சுரி.. இங்கெல்லாம் வெயில் பிச்சு எடுத்துள்ளது! தமிழ்நாடு வானிலை ரிப்போர்ட்
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், லடாக், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரகாண்டில் கடும் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று இரண்டாவது நாளாக வெப்பநிலை வாட்டி வதைத்தது. இன்றும் வெப்பநிலை உயரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று முதல் 3 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல்லில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பம் பதிவானது. ஈரோட்டில் நேற்று 100.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சேலத்தில் 100.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அதேபோல் நாமக்கல்லில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம்
இந்த நிலையில்தான் சேலத்தில் 100 நேற்றும் டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் உயர்ந்து உள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் 93 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது. வேலூரில் 97 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது. ஈரோடு, நாமக்கல்லில் 99 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. வரும் நாட்களில் இந்த பகுதிகளில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பம்
நாடு முழுக்க வெயில் வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது.கடந்த இரண்டு நாட்களாக வெப்ப காற்றும் வடமாநிலங்களில் வீசி வருகிறது வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் முதல் 37.78 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருக்கிறது . பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று வீச தொடங்கி உள்ளது.குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானாவில் வெப்பநிலை மிக அதிகமாக பதிவாகி இருக்கிறது. மத்திய இந்தியாவில் ஏப்ரல் மாதம் சராசரியாக 37.78 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. வடமேற்கு இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் பதிவாகி உள்ளது. இது சராசரி அளவை விட 3.35 டிகிரி செல்சியாஸ் அதிகம் ஆகும். மும்பையில் தார் பாலைவனத்தில் இருப்பதை விட அதிக வெப்பநிலை பதிவானது. அங்கே 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.

வெப்ப காற்று
அதேபோல் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், லடாக், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரகாண்டில் கடும் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் கடும் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இங்கே 37 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி உள்ளது. வடமாநிலங்களில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் தமிழ்நாட்டிலும் வெயில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன . அதில், வெயில் அதிகமாக இருக்கும் பிற்பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். மதியம் 12 -3 மணி வரை மக்கள் அதிகமாக வெளியே செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும்.

வெப்பநிலை
உடல் சூட்டை குறைக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை குறைத்துக்கொண்டு சூட்டை தணிக்கும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை உட்கொள்ள வேண்டும். வெளியில் செல்வதாக இருந்தால் முழுதாக உடலை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும். பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். தோலில் எரிச்சல், அதிக சூடு, சூடு கட்டிகள், வாந்தி, மயக்கம் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைகள், வயதானோர், பெண்கள் வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதனால் அவர்கள் முடிந்த அளவிற்கு வீட்டிலேயே இருக்க வேண்டும், என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வடக்கு மாவட்டங்களில் மிக கடுமையான வெயில் இன்றும் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications