மக்களே இந்த 3 மாவட்டங்களில் அனல்காற்று அதிகமாக இருக்கும்... வானிலை மையம் வார்னிங்!
சென்னை: சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் இன்றும் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆனால் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்வதால் வெப்பம் தணிந்துள்ளது.

நேற்று சென்னை உட்பட 15 மாவட்டங்களில் வெயில் சதத்தை தாண்டி பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னை உட்பட 3 மாவட்டங்களில் இன்றும் அனல்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் வெப்பத்தோடு அனல் காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை மையம் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அடுத்த இரண்டு நாட்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக வேலூர், திருத்தணியில் நேற்று 110 டிகிரி வெயில் கொளுத்தியது. திருச்சி, சேலம் 105 டிகிரி, பாளையங்கோட்டை, மதுரை, நாகப்பட்டினம், கரூர், சென்னை ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் நிலவியது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications