தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்கள்.. இன்று மிக மோசமான வெயில் அடிக்கும்.. வானிலை மையம் வார்னிங்!
தமிழகத்தில் இருக்கும் 7 முக்கியமான மாவட்டங்களில் இன்று மிக அதிகமாக வெயில் அடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இருக்கும் 7 முக்கியமான மாவட்டங்களில் இன்று மிக அதிகமாக வெயில் அடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியா முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம் ராட்சச வெட்டுக்கிளிகள் தாக்குதல் நிகழ்ந்து வருகிறது . இது போக வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாவட்டங்களில் மிக கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. அங்கு வெப்பநிலையோடு சேர்த்து மிக கொடூரமான அனல் காற்றும் வீசி வருகிறது.

தமிழ்நாடு நிலை
இந்த நிலையில் இன்னொரு பக்கம் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தினமும் வெயில் கொளுத்தி வருகிறது. அதிலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் தினமும் வெயில் அடித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாக்கி உள்ளனர். தினமும் 5க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தமிழகத்தில் 100 டிகிரி பாரஹீட் வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை நிலவி வருகிறது.

அனல் காற்று
தமிழகத்தில் வெயிலோடு சேர்த்து கடுமையான அனல்காற்றும் வீசி வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு இதேபோல் கடுமையான வெப்பநிலை தமிழகத்தில் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் இருக்கும் 7 முக்கியமான மாவட்டங்களில் இன்று மிக அதிகமாக வெயில் அடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்கு எல்லாம்
இன்று தமிழகத்தில் வேலுார், கரூர், திருச்சி, மதுரை , தர்மபுரி, சேலம், திருப்பத்துார் ஆகிய 7 மாவட்டங்களில்தான் அதிக வெப்பநிலை இருக்கும். இங்கு இதுவரை பதிவான வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை பதிவாகும். 42 டிகிரி செல்ஷியசை எட்டும். இதில் திருத்தணியில் 42 டிகிரி செல்சியஸ் தொட அதிக வாய்ப்புள்ளது. திருத்தணி, வேலூர்தான் மோசமாக இதனால் பாதிக்கும்.

அனல் காற்று
இங்கு அனல் காற்று வீசும். இந்த காற்றின் வேகம் 40 கிமீ/நேரம் அளவிற்கு இருக்கும். இதனால் மக்கள் மிக கடுமையாக பாகிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் சென்னையில் கொஞ்சம் வெயில் குறையும் . சென்னையில் 38 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வந்தது. ஆனால் அது கொஞ்சம் குறைந்து சென்னையில் இன்று 37 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications