விடாமல் பொளந்து எடுத்து கனமழை.. சென்னையில் விமான சேவை கடுமையாக பாதிப்பு! 30+ விமானங்கள் தாமதம்
சென்னையில்: தலைநகர் சென்னையில் நேற்றிரவு கொட்டி தீர்த்த கனமழையால் விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல்வேறு விமானங்கள் தாமதமாக வந்து சென்றன.
தலைநகர் சென்னையில் நேற்றிரவு பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. மாலை ஆரம்பித்த மழை அதன் பிறகு நகரின் முக்கிய பகுதிகளில் அதிகரிக்கத் தொடங்கியது.

சென்னையின் நகர்ப் பகுதிகள் புறநகர்ப் பகுதிகள் என்று பரவலாக பல்வேறு பகுதிகளிலும் மழை அதிகமாகவே இருந்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கிய நிலையில் வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
தொடர் மழையால் சாலைகளில் நீர் தேங்கிய நிலையில், நேற்று பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மேலும்,நீர் தேங்கியதால் நகரில் இருக்கும் சில சுரங்கப்பாதைகள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. கனமழை தொடர்ந்து கொட்டி வந்த நிலையில், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று மாநகராட்சி தரப்பிலும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தேங்கிய மழைநீரை அகற்றவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. மேலும், மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
நேற்றிரவு குறிப்பாகச் சென்னை புறநகர்ப் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை பகுதிகளில் மழை அதிகமாக இருந்தது. குறிப்பாக மீனம்பாக்கத்தில் மழை அதிகமாகவே இருந்தது. கனமழை காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் பயணிகளும், அவர்களை வழியனுப்ப வந்தவர்களும் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
தொடர்ச்சியாகக் கனமழை பெய்த நிலையில், சென்னையில் இருந்து கிளம்ப வேண்டிய டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரூ உள்ளிட்ட 30+ விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. அதேபோல சென்னைக்கு வரவேண்டிய திருச்சி, மதுரை உள்பட 10+ விமானங்கள் தாமதமாக வந்து சேர்ந்தன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications