Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மழையோடு விடிந்த அதிகாலை..சென்னை சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர்.. உற்சாகமாக வாக்கிங் போன அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிகாலை முதலே சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கியுள்ளது. பல பகுதிகளில் குறுகிய சாலைகளாக இருப்பதால் அலுவலகங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களும் வாகனங்களில் மெதுவாக ஊர்ந்து சென்றனர்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது.

Heavy rain continues in Chennai Flood water on roads Minister M.Subramanian walking in the morning

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும அதன் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, பெருங்குடி, துரைப்பாக்கம், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம், திருவான்மியூர் பள்ளிக்கரணை, மேடவாக்கம், ஓட்டியம்பாக்கம், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் காலை முதலே சாரல் மழையாக தொடங்கி கனமழையாக பெய்தது.

விட்டு விட்டு பெய்த மழையால் பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. காலையில் பள்ளி, கல்லூரிகள், பணிகளுக்கு சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் சாலைகள் குறுகி இருப்பதால் பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து சென்றன.

செங்கல்பட்டு அருகே தண்டாவளத்தில் மரம் முறிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அகற்றிய பின்னர் அரை மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து சீரானது. தமிழ்நாடு முழுவதும் காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காலை முதலே லேசான மழை பெய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே , சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று அறிவித்துள்ளார். இதனால் விடுமுறையை எதிர்பார்த்து காத்திருந்த மாணவ மாணவிகள் ஏமாற்றமடைந்தனர்.

அடாது மழை பெய்தாலும் விடாது வாக்கிங் செல்வோம் என்று கூறி அமைச்சர் மா.சுப்ரமணியன் காலையில் மழை நேரத்திலுல் நடை பயிற்சி மேற்கொண்டார். அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இன்று அதிகாலையில் எங்கள் வேலையை நாங்கள் செய்ய தொடங்கினோம்... மழை அதன் வேலையை அது செய்துகொண்டிருந்தது...

நனைந்தபடியே நடப்பது தனி சுகமே... என்று கூறி மழையோடு வாக்கிங் செல்வதை பதிவிட்டுள்ளார் மா.சுப்ரமணியன்.
சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே சென்னையில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+