தொடர்ந்து மிரட்டும் மழை.. 4 மாவட்டங்களில் பொது விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு
சென்னை: நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், மேற்கண்ட மாவட்டங்களில் பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் இந்த மாத துவக்கத்தில் சென்னையில் பேய் மழை கொட்டியது. 36 மணி நேரம் ஒரு நொடி கூட கேப் இல்லாமல் செய்த மழையால் சென்னை நகரமே மிதந்தது. இந்த வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை முழுமையாக மீண்டு வர ஒரு வாரத்திற்கும் மேல் ஆனது.

இந்த நிலையில், தற்போது குமரி மற்றும் இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை பெய்ய தொடங்கிய மழை தற்போது வரை விடாமல் பெய்து வருகிறது. குறிப்பாக இதனால், தென் மாவட்டங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
உபரி நீரை நம்பியாறு- கருமேனி ஆற்றில் திருப்பிவிட்டு சோதனையும் நடைபெற்று வருகிறது. அகஸ்தியர் அருவில் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்து கொண்டு விழுகிறது. நெல்லை மாவட்டத்தின் நகர பகுதிகள், திசையன் விளை உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்கும் தண்ணீர் புகுந்துள்ளது. இடைவிடாமல் பெய்யும் இந்த மழை இன்றும் பெய்யும் என்று வானியல் ஆர்வர்லர்கள் கூறி வருகின்றனர்.
தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழை தொடர்ந்து பெய்து வருவதால் மேற்கூறிய மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மட்டும் இன்றி அரசு அலுவலங்களும் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை இயங்காது. எனினும், அத்தியாவசிய சேவைகளான தீ அணைப்பு துறை, காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பால் விநியோகம், குடிநீர் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், போக்குவரத்து, உணவகங்கள், பெட்ரோ பங்குகள் உள்ளிட்டவை வழக்கம் போல செயல்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications