இதெல்லாம் டீசர்தான்.. அந்த 12 மணி நேரங்கள்தான் மிக முக்கியம்.. நிவர் வருவதற்கு முன்.. என்ன நடக்கும்?
சென்னை: நிவர் புயல் தமிழகத்தை முழுமையாக தாக்குவதற்கு 10 -12 மணி நேரங்களுக்கு முன்பே கடுமையான மழை பெய்யும். இந்த மழைக்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது.
Recommended Video
வங்கக்கடலில் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு இருந்த நிவர் புயல், தாழ்வு மண்டலமாக மாறி தற்போது முழுமையான புயலாக உருவெடுத்து உள்ளது. இந்த நிவர் புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.
நாளை இந்த புயல் தமிழகத்தில் கரையை கடக்க உள்ளது. மஹாபலிபுரத்திற்கும் - காரைக்காலுக்கும் இடையே இந்த புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எப்படி
இந்த புயல் நாளை கரையை கடக்கும் என்றாலும் கூட.. இன்றே மழை தொடங்கிவிட்டது. அடுத்த 12 மணி நேரங்கள் மிக அதிக அளவில் மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் தற்போது மழை பிச்சு எடுத்துக்கொண்டு இருக்கிறது.

எங்கு மழை
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் மழை பிச்சு எடுத்துக் கொண்டு இருக்கிறது. நேற்று இரவு முழுக்க சென்னையில் மழை பெய்தது. நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக சென்னையில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட துவங்கி உள்ளது.

சென்னை நிலை
அடுத்த 12 மணி நேரங்களுக்கு இப்படித்தான் கனமழை பெய்யும். சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் பெய்யும் மழை புயலுக்கு பின்பான மழையாகும். இந்த மழை புயல் காரணமாக ஏற்படுகிறது என்பதை விட.. காற்றழுத்த தாழ்வு நிலை நகர்வு காரணமாக ஏற்படுகிறது. பொதுவாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் மொத்தமாக வலுப்பெற்று புயலாக மாறும்.

சுற்றி
அப்போது அந்த தாழ்வு மண்டலத்தை சுற்றி தாழ்வு பகுதிகள் அங்கங்கே சில உதிரிகள் போல இருக்கும். இது சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் நகர்வு காரணமாகவே தற்போது சென்னையில் மழை பெய்கிறது.இதற்கே இவ்வளவு மழை என்றால் மொத்தமாக புயல் தமிழகம் நோக்கி நகர்ந்து வந்தால் எவ்வளவு மழை பெய்யுமென்று நினைத்து பாருங்கள்.

எத்தனை
மொத்தமாக புயல் நெருங்கும் போது மழை இன்னும் தீவிரம் அடையும். அடுத்த 10-12 நேரங்கள் சென்னையில் இதன் காரணமாக மழை பெய்யும். அதன்பின் புயலின் வருகையால் மழை பெய்யும். பின் புயல் சென்ற பின் மீண்டும் மழை பெய்யும். இதனால் சென்னை இந்த முறை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications