வரிசையில் நிற்க வைத்து.. சாப்பாடு பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!
சென்னை: சென்னையில் மழை வெள்ள பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் இன்று மக்களுக்கு நேரில் சென்று உணவு வழங்கினார்.
தமிழ்நாட்டில் தீவிரமாக கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது. முக்கியமாக சென்னையில் நேற்று இரவில் இருந்தே தீவிரமாக மழை பெய்து வருகிறது.
செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளதால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். எழும்பூர், வடசென்னை என்று 11 இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை செய்து வருகிறார்.

நிவாரணம்
இதையடுத்து களத்தில் ஆய்வு பணிகள் மட்டுமின்றி நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார். எழும்பூரிலும், வடசென்னையின் சில பகுதிகளிலும் முதல்வர் ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். போர்வை, பிஸ்கட், பிரெட் அடங்கிய உணவு பொருட்கள் பொட்டலம், மாஸ்க் ஆகியவற்றை மக்களுக்கு வழங்கினார்.

உணவு
அதன்பின் வடசென்னையின் பாபா நகர், ஜிகேஎம் நகர், ஜவஹர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் அங்கு அரசு சார்பாக தயாரிக்கப்பட்டு இருந்த அன்னதான உணவுகளை முதல்வர் ஸ்டாலின் தனது கைப்பட மக்களுக்கு வழங்கினார். மக்களை வரிசையில் நிற்க வைத்து அவர்களுக்கு முதல்வரே நேரடியாக உணவு பரிமாறினார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு
வரிசையில் நின்ற மக்கள் பலரிடம் முதல்வர் நலம் விசாரித்து கனிவாக பேசினார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். சென்னையில் மழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளில் முதலில் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். அங்கு மக்களை மீட்க வேண்டும். வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஸ்பெஷல் உத்தரவு
இந்த பகுதிகளில் முதலில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆங்காங்கே விழுந்துள்ள மரங்களை விரைவில் அகற்றி போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் போது அமைச்சர்கள் கே. என் நேரு, சேகர் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications