2வது நாளாக.. மீண்டும் களத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின்.. ராயபுரம், ஆர்கே நகர் என பல இடங்களில் ஆய்வு
சென்னை: சென்னையில் மழை பாதித்த இடங்களை முதல்வர் ஸ்டாலின் 2வது நாளாக பார்வையிட்டு வருகிறார். பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
நேற்று முதல்நாள் மாலையில் இருந்தே சென்னையில் கனமழை பெய்து வருகிறது. வடபழனி, நுங்கம்பாக்கம், தி நகர், போரூர், வளசரவாக்கம், அண்ணாசாலை, கோடம்பாக்கம், கோயம்பேடு, குரோம்பேட்டை என்று சென்னையின் முக்கிய பகுதிகளில் எல்லாம் மிக தீவிர கனமழை பெய்து வருகிறது.
நேற்று முதல்நாள் மட்டும் 207 மிமீ மழையும் நேற்று 70 மிமீ மழையும் சென்னையில் பெய்து இருக்கிறது. இதனால் சென்னை சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

பார்வையிட்டார்
இதையடுத்து நேற்று வடசென்னையில் முதல்வர் ஸ்டாலின் மழை பாதித்த இடங்களை பார்வையிட்டார். நேற்று காலை 10.30 மணிக்கு களத்திற்கு சென்றவர் இரவு 7.30 மணி வரை 9 மணி நேரம் விடாமல் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். எழும்பூர், பாடி உள்ளிட்ட 11 இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். வடசென்னைதான் இந்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது.

ஆய்வு
இதனால் வடசென்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் சென்னையில் மழை பாதித்த இடங்களை முதல்வர் ஸ்டாலின் 2வது நாளாக பார்வையிட்டு வருகிறார். சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் பின்வரும் இடங்களில் இன்று முதல்வர் நேரில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார். துறைமுகம் தொகுதியில் கல்யாணபுரம் கால்வாய், கல்யாணபுரம் மருத்துவ முகாம், வுட்வர்ப் வாயில் எண். 4 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார்.
Recommended Video

ஆய்வு
அதன்பின் ராயபுரம் தொகுதியில் பாரத் திரையரங்கம் ரவுண்டானா, மழைநீர் தேங்கிய பகுதி பார்வையிடுதல், உணவு மற்றும் நிவாரண உதவி வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் H6 காவல் நிலையம், உணவு மற்றும் நிவாரண உதவி வழங்குதல், தொப்பை விநாயகர் கோயில் தெரு, கால்வாய் பார்வையிடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார்.

எங்கு?
பெரம்பூர் தொகுதியில் முல்லை நகர் பாலம், கால்வாய் பார்வையிடுதல், மகாகவி பாரதியார் நகர் (MKB Nagar), உணவு மற்றும் நிவாரண உதவி வழங்குதல் ஆகிய பணிகளை செய்கிறார். முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மட்டும் மேற்கொள்ளாமல் இன்றும் நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்க உள்ளார். உணவு பொட்டலங்கள், மாஸ்க், போர்வை, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.

அதிகாரிகள்
முதல்வர் ஸ்டாலினின் இன்றைய ஆய்வில் அமைச்சர் சேகர் பாபு, கே என் நேரு ஆகியோர் உடன் இருப்பார்கள். அதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையர், டிஜிபி சைலேந்திர பாபு, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருப்பார்கள். அதேபோல் முதல்வர் செல்லும் மண்டலத்திற்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளும் உடன் இருப்பார்கள்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications