சென்னையில் மீண்டும் கனமழை.. பல பகுதிகளில் விடாமல் பெய்கிறது.. வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம்!
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மேலும் நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தெற்கு, வடக்கு என்று தமிழகம் முழுக்க பரவலாக இதனால் மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மழையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. தூத்துக்குடியில் சில இடங்களில் இதனால் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.

சென்னை
இந்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காலையில் இருந்து லேசாக மழை பெய்த நிலையில் மாலையில் மழை தீவிரம் அடைந்தது. இதனால் சாலைகளில் மேலும் நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எங்கு
சென்னையில் இருக்கும் நுங்கம்பாக்கம், வடபழனி, முகப்பேர், தாம்பரம், கிண்டி, வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல் தி நகர், திருவான்மியூர், அண்ணாசாலை, கோயம்பேடு, கே.கே.நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

மழை நிலவரம்
சென்னையில் நாளையும் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரங்களுக்கு சென்னையில் நல்ல மழை பெய்யும். அதன்பின் போக போக மழையின் அளவு குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம்
சென்னையில் இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது ஏரியின் அளவு 22 அடியை எட்ட உள்ளது. 22 அடியை எட்டியதும் ஏரி திறக்கப்படும் என்பதால், அடையாறு ஆற்று பகுதியில் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications