தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் கனமழை அடிச்சு ஊத்துமாம்.. வானிலை மையம் தகவல்
Recommended Video

சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் சந்தித்தனர்,
அப்போது அவர்கள் கூறும் போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்மாவட்டங்களில் கனமழை
தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மத்திய மாவட்டங்களிலும், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.

தமிழகத்தில் பலத்தமழை
இதனிடையே வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், " 28ம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

29ம் தேதி வரை கனமழை
இதேபோல் இன்று (26ம் தேதி) முதல் 29ம் தேதி வரை கேரளாவின் பெரும்பாலான இடங்களிலும் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வானிலை மையம்
வெப்பநிலையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது

கும்பகோணத்தில் நல்ல மழை
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிளில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. ஊட்டி மற்றும் அதன்சுற்று வட்டாரப் பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மிதமான மழை பெய்தது.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications