சென்னையில் கருமேகங்கள் சூழ.. திடீர் மழை.. குளிர்ந்தது தமிழகத்தின் தலைநகர்!
சென்னை: சென்னையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
கடந்த வாரம் மேற்கு திசை காற்று வேகமாக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

தமிழகத்தில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 18ஆம் தேதி வரை தமிழகம். புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் காலை முதல் வெயில் குறைந்த அளவே காணப்பட்டது.
மாலை 4 மணிக்கு மேல் திநகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அது போல் அண்ணா சாலையில் லேசான மழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி, சூளைமேடு, வடபழனி, எம்எம்டிஏ காலனி, அசோக்நகர், கே கே நகர், வில்லிவாக்கம், அண்ணாநகர், அயனாவரம், பசுமை வழி சாலை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் பகுதிகளில் மழை பெய்கிறது. முகப்பேர், நொளம்பூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் மழை நீரே தேங்காது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications