Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணிப்பேட்டையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு.. மாவட்ட கலெக்டர் நள்ளிரவில் கிராமங்களில் ஆய்வு

ராணிப்பேட்டையில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேட்டூர் நீர் திறப்பு அதிக அளவானது, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50,000 கன அடியானது நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் உபரிநீர் திறப்பும் அதே அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் சென்னைக்கு சுமார் 100 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டிருந்த நிலையில், இன்று நாளை அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் சென்னை - புதுச்சேரி பகுதியில் கரையை கடந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழகம்

வடதமிழகம்

இதனிடையே வடதமிழகத்தில் கனத்த மழை பெய்து வருகிறது.. இதனால் பல்வேறு அணைகள் நிரம்பி வருகின்றன.. மேட்டூர் நீர் திறப்பு அதிக அதே அளவு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50,000 கன அடியானது நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் உபரிநீர் திறப்பும் அதே அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாடு, கர்நாடகா, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும், கபினி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதாலும், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியில் இருந்து 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது..

மேட்டூர்

மேட்டூர்

இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. அணையிலிருந்து உபரி நீர்திறப்பு அணை மற்றும் சுரங்கம் மின்நிலையத்தின் வழியாக வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.. செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 3,000 லிருந்து 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.. நீர்வரத்து 2,700 கன அடியாக உள்ளது.. பிச்சாட்டூர் அணையிலிருந்து ஆரணியாற்றில் 6 ஆயிரம் கன உபரிநீர் திறக்கப்பட்டதால் காளஹஸ்தி சாலை மூடப்பட்டது..

வாலாஜா

வாலாஜா

வாலாஜா அருகே அணைக்கட்டு தடுப்பணை முழுமையாக நிரம்பியது.. அணைக்கட்டு தடுப்பணைக்கு வரும் 98,154 கன அடி தண்ணீர் அப்படியே பாலாற்றில் வெளியேற்றப்படுகிறது. வேலூர் காட்பாடி அருகே உள்ள பொன்னை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது.. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்முள்ளது. பொன்னை ஆற்றில் 55,816 கன அடி நீர் வருவதால், வேலூர், ராணிப்பேட்டைக்கு வெள்ள நீர் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொன்னையாறு

பொன்னையாறு

பொன்னையாற்றில் 65,000 கன அடிநீரும், பாலாற்றில் 42,500 கன அடி நீரும் வெளியேற்றப்படுவதால், 30க்கும் மேற்பட்ட கரையோர கிராம மக்களை வெளியேற்றும் பணிகளை நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.. ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கலவகுண்டா அணை நிரம்பியதை தொடர்ந்து அணையில் இருந்து பொன்னை அணைக்கட்டு பகுதிக்கு 65,000 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது. இந்த அளவிற்கு நீர்வரத்து கடந்த 1930 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது ஏற்பட்டுள்ளது.. இதனால் பொன்னையாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ராணிப்பேட்டை - பொன்னை செல்லும் நெடுஞ்சாலையை தொட்டு தண்ணீர் செல்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+