சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. சாலைகளில் வெள்ளப்பெருக்கு.. வாகன ஓட்டிகள் அவதி
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
Recommended Video
தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கடமலைகுண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதேபோல், ஆண்டிபட்டியிலும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. வெள்ள நீரால் அடித்து கொண்டு வரப்பட்ட ராட்சச மரங்கள் அணைக்கட்டு மேல் பகுதியில் ஆபத்தான நிலையில் தேங்கி நிற்கிறது.
மதுரையில் நேற்று மாலை, சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றதால், அலுவலகங்களுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். முக்கிய இடங்களான பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
மதுரை மாநகர் பகுதியில் கன மழை கொட்டித் தீர்த்ததால், ஆரப்பாளையத்தில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியது. ஆபத்தை உணராமல் அவ்வழியே சென்ற தனியார் பேருந்து ஒன்று தண்ணீரில் சிக்கிக் கொண்டது. இதுகுறித்த தகவலின்பேரின் சம்பவ பகுதிக்கு வந்த தீயணைப்புத்துறையினர், பேருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், வெளுத்து வாங்கிய கனமழையால் கோவில் வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது. கோவில் யானை பார்வதி, கோயிலில் தேங்கியுள்ள மழைநீரில் தத்தளித்தவாறு சென்றது. கோயில் பணியாளர்கள் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் கனமழை பெய்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், சூறைக்காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. திடீர் மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
கோவையில் காந்திபுரம், உக்கடம், ராமநாதபுரம், சிங்கநல்லூா், பீளமேடு, கணபதி, ரயில் நிலையம், குனியமுத்தூா், சுந்தராபுரம், போத்தனூர், பேரூர், வடவள்ளி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கியது. தேங்கி நின்ற மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
தஞ்சாவூர் திருவையாறு வல்லம் திருக்காட்டுப்பள்ளி கல்லணை உள்பட மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது, அப்போது பயங்கர இடி மின்னலுடன் இந்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் குருவை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications